செல்வந்தர்களை அதிகம் ஈர்த்துள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் வந்துள்ளது.
சிங்கப்பூர் 2022இல் மில்லியன் டாலர் சொத்தை வைத்துள்ள 2,800 செல்வந்தர்களை ஈர்க்கும் என்று அறிக்கை ஒன்று கூறியது.
ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் உலகக் குடிமக்கள் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.
லண்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனம் தனியார் சொத்துகளையும் முதலீட்டாளர்கள் குடியுரிமை மாறும் போக்குகளையும் கண்காணிக்கிறது.
ஐக்கிய அரபு சிற்றரசுகள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றது. 2022இல் 4,500 செல்வந்தர்களை அது ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் வந்த ஆஸ்திரேலியா 4,000 செல்வந்தர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் உலகச் செல்வந்தர்களை ஈர்த்து வந்த அமெரிக்கா ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் 8,000 இந்தியச் செல்வந்தர்கள் வரை இந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்குக் குடிபெயரலாம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
செல்வந்தர்கள் அதிகம் வெளியேறிச் செல்லும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது.
செல்வந்தர்கள் வெளியேறும் முதல் இரண்டு நாடுகளாக ரஷ்யாவும் சீனாவும் இருந்து வருகின்றன.
இந்த ஆண்டு மொத்தம் 88,000 செல்வந்தர்கள் நாடு மாறுவார்கள் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.
அடுத்த ஆண்டு ஆக அதிகமாக 125,000 முதலீட்டாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நாடு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

