பொருள், சேவை வரி உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து சேகரிப்பு

பொருள், சேவை வரி உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து சேகரிப்பு

2 mins read
ca6a4f76-ff4c-49be-8e3a-557c509a105a
-

பொருள், சேவை வரியை ஏழு விழுக்­காட்­டில் இருந்து ஒன்­பது விழுக்­காட்­டுக்கு இரண்டு கட்­டங்­க­ளாக உயர்த்­து­வது உள்­ளிட்ட பொருள், சேவை வரிச் சட்­டத்­தில் பரிந்­து­ரைக்­கப்­படும் மாற்­றங்­கள் குறித்­துக் கருத்­து உரைக்­கும்­படி பொது­மக்­களை நிதி­ய­மைச்சு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

பரிந்­து­ரைக்­கப்­பட்ட ஐந்து மாற்­றங்­களில் இரண்டு இந்த ஆண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்ட உரை­யில் அறி­விக்­கப்­பட்­ட­வை.

அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் தேதி­யில் இருந்து பொருள், சேவை வரியை ஏழு விழுக்­காட்­டி­லி­ருந்து எட்டு விழுக்­காட்­டுக்கு உயர்த்­து­வ­தும் பின்­னர் 2024ஆம் ஆண்டு ஜன­வரி முதல் தேதி­யி­லி­ருந்து ஒன்­பது விழுக்­காட்­டுக்கு உயர்த்­து­வ­தும் பரிந்­து­ரைக்­கப்­பட்ட மாற்­றங்­களில் முத­லா­வது.

இதற்கு முன்­னர் 2007ஆம் ஆண்டு பொருள், சேவை வரி ஐந்து விழுக்­காட்­டி­லி­ருந்து ஏழு விழுக்­காட்­டிற்கு உயர்த்­தப்­பட்­டது.

இனி அது ஒன்­பது விழுக்­காட்­டிற்கு உயர்த்­தப்­பட்ட பிறகு 2024ஆம் ஆண்டு முதல் அர­சாங்­கத்­துக்கு ஆண்­டுக்கு ஏறக்­கு­றைய 3.5 பில்­லி­யன் வெள்ளி வரு­வாய் கிட்­டும் என்று மதிப்­பிடப்­பட்­டுள்­ளது.

இந்த வரு­வாய், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செல­வு­க­ளுக்­கும் மூத்த குடி­மக்­க­ளின் பரா­ம­ரிப்­புச் செலவு உள்­ளிட்ட சமூ­கச் செல­வு­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­படும்.

பரிந்­து­ரைக்­கப்­படும் இரண்­டா­வது மாற்­றம் பயண ஏற்­பாட்­டுச் சேவை தொடர்­பா­னது.

அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் தேதி­யில் இருந்து இத்­த­கைய சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் எந்த நாட்­டைச் சேர்ந்­தவை என்­ப­தன் அடிப்­ப­டை­யில் வரி விகிதம் அமையவேண்டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் உள்­ளூர் நிறு­வ­னங்­களும் வெளி­நாட்டு நிறு­வ­னங்­களும் தொடர்ந்து நியா­ய­மான வகை­யில் நடத்­தப்­ப­டு­வதை உறுதி­செய்ய இய­லும்.

இது சாத்­தி­ய­மா­னால் சிங்­கப்­பூ­ருக்கு வெளி­யில் வசிக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மட்­டும் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் பொருள், சேவை வரி செலுத்­தத் தேவை இராது. தங்­கு­மிட ஏற்­பாடு செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

பரிந்­து­ரைக்­கப்­பட்ட இதர மூன்று மாற்­றங்­களும் சிங்­கப்­பூ­ரின் பொருள், சேவை வரி நடை­மு­றை­யைச் சரி­யான இடை­வெளியில் மறு­ஆய்வு செய்­வது தொடர்­பா­னவை என்று நிதி­ய­மைச்சு கூறி­யது.

இதுகுறித்­துப் பொது­மக்­கள் நேற்று முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை மின்­னஞ்­சல் மூலம் கருத்­து­ரைக்­க­லாம். நிதி­ய­மைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் பதி­வேற்­றப்­பட்­டுள்ள மாதி­ரிப் படி­வத்­தைப் பயன்­ப­டுத்தி அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை கருத்­து­களைச் சமர்ப்­பிக்­க­லாம்.