ஜூரோங் ஈஸ்ட் தீச் சம்பவம் தொடர்பில் 15 பேர் வெளியேற்றம்

ஜூரோங் ஈஸ்ட் தீச் சம்பவம் தொடர்பில் 15 பேர் வெளியேற்றம்

1 mins read
48ddb5d7-44f3-4cf6-a718-0ae923b087b0
ஐந்தாம் மாடி வீட்டின் சமையலறை தீயில் சேதமடைந்தது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் -

ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 32ல் உள்ள புளோக் 310ன் ஐந்­தாம் மாடி வீட்­டில் நேற்று தீ மூண்­டது.

சம்­ப­வத்­தை­ய­டுத்து பச்­சி­ளங்­கு­ழந்தை ஒன்று முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக தேசி­யப் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தீய­ணைப்­பா­ளர்­கள் தீயை அணைத்­த­து­டன் அந்த வீட்­டில் இருந்த இரண்டு பூனை­களை மீட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

நெருக்­கடி நேர மருத்­து­வத் தொழில்­நுட்­பத்­தில் பயிற்சி பெற்ற குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் அந்­தப் பூனை­க­ளுக்கு உயிர்­வாயு கொடுத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சமை­ய­ல­றை­யில் மூண்ட தீ குறித்து நேற்­றுக் காலை 7.50 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக அது 'ஃபேஸ்புக்­கில்' பதி­விட்­டுள்­ளது.

தீ மூண்ட வீட்­டில் வசித்த இரு­வ­ரும் பச்­சி­ளங்­கு­ழந்­தை­யு­டன் தீய­ணைப்­பா­ளர்­கள் செல்­லும் முன்­னரே அங்­கி­ருந்து வெளி­யே­றி­னர். அரு­கில் இருக்­கும் வீடு­களில் இருந்து ஏறக்­கு­றைய 15 பேரைக் காவல்­துறை வெளி­யேற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

தீ மூண்­ட­தற்­கான கார­ணம் குறித்த விசா­ரணை தொடர்­கிறது.