அமைச்சர் ஓங்: அடுத்த கொவிட்-19 அலைக்குத் தயாராக இருக்கவேண்டும்

அமைச்சர் ஓங்: அடுத்த கொவிட்-19 அலைக்குத் தயாராக இருக்கவேண்டும்

2 mins read
0ac93934-15ca-42a2-9a8d-d25ae13d6067
-

தாதிமை இல்­லங்­களில் உள்ள எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு பெரிய அள­வில் கொவிட்-19 பாதிப்பு ஏற்­ப­டா­வண்­ணம், சிங்­கப்­பூர் நிலை­மையை வெற்­றி­க­ர­மா­கச் சமா­ளித்­துள்­ளது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யி­ருக்­கி­றார்.

தடுப்­பூசி செலுத்­து­தல், சிறப்­பான தொற்­றுக் கட்­டுப்­பாடு நட­வ­டிக்­கை­கள் மூலம் இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது என்­றார் அவர்.

தாதிமை இல்­லங்­களில் தங்­கி­யி­ருப்­போ­ரில் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெற்ற 90 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோ­ருக்­குச் சுகா­தார அமைச்சு தடுப்­பூசி போடும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யதை அவர் சுட்­டி­னார்.

மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யச் சேவையை நாடு­வோ­ருக்­கும் பத்­தா­யி­ரத்­துக்­கும் அதி­க­மான வீட்­டுப் பரா­ம­ரிப்­புச் சேவையை நாடு­வோ­ருக்­கும் இதன்­கீழ் தடுப்­பூ­சி­கள் செலுத்­தப்­பட்­டன.

இருப்­பி­னும் அடுத்த கிரு­மித்­தொற்று அலைக்­கும் கொவிட்-19 கிரு­மி­யின் புதிய திரி­பு­கள் ஏற்­படுத்­தக்­கூ­டிய தாக்­கம் அல்­லது புதிய கிரு­மிப்­ப­ர­வல் ஏதும் ஏற்­பட்­டால் அதைச் சமா­ளிப்­ப­தற்­கும் சிங்­கப்­பூ­ரின் தாதிமை இல்­லங்­கள் தயார்­நி­லை­யில் இருக்­க­வேண்­டும் என்­றார் அமைச்­சர் ஓங்.

ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்பு அமைப்பின் வரு­டாந்­தர சமூ­கப் பரா­ம­ரிப்­புப் பணித்­திட்­டக் கருத்­த­ரங்­கில் அவர் உரை­யாற்­றி­னார்.

நிகழ்ச்சி நேற்று பேன் பசி­பிக் சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் நடை­பெற்­றது. நேர­டி­யா­க­வும் காணொளி மூல­மும் பலர் இதில் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் அடுத்த மாதமோ ஆகஸ்ட் மாதமோ மேலும் ஒரு கிரு­மிப்­ப­ர­வல் ஏற்­ப­டக்­கூ­டும். ஆனால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­வோர் அல்­லது மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை எடுக்க நேரி­டு­வோர் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறை­யும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

"எனவே சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­பின் ஒவ்­வோர் அங்­க­மும் இத­னைச் சமா­ளிக்­கத் தயா­ராக இருக்­க­வேண்­டும்; தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மூத்­தோர் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும்," என்­றார் அவர்.