சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பநிலை
சிங்கப்பூரில் சென்ற மாதம் முழுவதுக்குமான அதிகபட்ச வெப்பநிலை மே 13ஆம் தேதி பதிவானது. அட்மிரல்டியில் அன்று வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியசாக இருந்தது. கடந்த 20, 30 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதத்துக்குமான சராசரி அன்றாட அதிகபட்ச வெப்பநிலை உயர்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. 2017 முதல் 2021 வரையில் 53 மாதங்களிலும் 2007 முதல் 2011 வரையில் 42 மாதங்களிலும் 2012 முதல் 2016 வரையில் 48 மாதங்களிலும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது.
ஜெர்மானிய அதிபர் வருகை
ஜெர்மனியின் அதிபர் ஃபிராங் வால்ட்டர் ஸ்டைன்மையர் இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ளார். அதிபர் ஹலிமா யாக்கோப், தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

