மீண்டும் சேவையைத் தொடங்கிய சிலேத்தார் விமான நிலையம்

மீண்டும் சேவையைத் தொடங்கிய சிலேத்தார் விமான நிலையம்

2 mins read
56ff060c-dde2-46c5-873b-1f02f36a51b2
சுபாங்கிலிருந்து நேற்றுக் காலை 7.30 மணிக்குக் கிளம்பிய 'ஃபயர்ஃபிளை எஃப்ஒய்3124' விமானம் 8.50 மணிக்கு சிலேத்தார் வந்தடைந்தது. படம்: 'சாவ்பாவ்' -

ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் சேவை­யைத் தொடங்­கி­யுள்­ளது சிலேத்­தார் விமான நிலை­யம்.

இத­னைக் குறிக்­கும் வித­மாக மலி­வுக் கட்­டண விமா­னச் சேவை வழங்­கும் மலே­சி­யா­வின் 'ஃபயர்­ஃபிளை' நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான 'எஃப்ஒய்3124' விமா­னம் நேற்­றுக் காலை 8.50 மணி­ய­ள­வில் சிலேத்­தார் விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தது.

59 பய­ணி­க­ளு­டன் சுபாங் நக­ரி­லி­ருந்து இந்த விமா­னம் வந்­து­சேர்ந்­தது. முதற்­கட்­ட­மாக சிங்­கப்­பூ­ருக்­கும் சுபாங்­கிற்­கும் இடை­யில் தின­சரி நான்கு விமா­னச் சேவை­களை வழங்க நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

சிலேத்­தார் விமான நிலை­யத்­தில் இருந்து சுபாங்­கின் சுல்­தான் அப்­துல் அஸிஸ் ஷா விமான நிலை­யம் நோக்­கிச் செல்­லும் இரு விமா­னங்­களும் அங்­கி­ருந்து இங்கு இரண்டு விமா­னங்­களும் அன்றாடம் சேவை வழங்­கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் விமானச் சேவை நிறுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­னர் நாள்தோறும் இருவழிகளிலும் மொத்­தம் 12 விமா­னச் சேவை­கள் வழங்­கப்­பட்­டன.

பய­ணி­க­ளின் தேவைக்­கேற்ப இந்த ஆண்டு இறு­திக்­குள் விமா­னச் சேவை­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முயற்சி மேற்­கொள்­ளப்­படும் என்று 'ஃபயர்­ஃபிளை' நிறு­வ­னத் தலைமை நிர்­வாகி ஃபிலிப் சீ செய்­தி­யா­ளர்­களிடம் கூறி­னார்.

இரண்டு விமான நிலை­யங்­களும் அள­வில் சிறி­யவை என்­ப­தால் சுபாங்­கில் இருந்து 'ஃபயர்­ஃபிளை' விமா­னம் மூலம் மூன்று மணி நேரத்­திற்­குள் சிங்­கப்­பூர் வந்­த­டை­ய­லாம் என்­றார் அவர்.

நேற்­றைய முதல் விமா­னத்­தில் வந்­து­சேர்ந்த பய­ணி­கள் பல­ரும் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்பே இந்த விமா­னச் சேவை­யைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறி­னர்.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு விமா­னச் சேவை­கள் தற்­போது மீண்­டும் தொடங்­கப்­பட்­டி­ருப்­பது தங்­க­ளுக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் இவர்கள் கூறி­னர்.

வருங்காலத்தில் பினாங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சேவை வழங்கத் திட்டமிருப்பதாகக் கூறப்பட்டது.