சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவர், சன்செக் சிட்டி டவர் 2ல் ஒட்டுமொத்த மாடியையும் $38.8 மில்லியனுக்கு வாங்கியுள்ளார்.
சீன நாட்டவரான அந்த ஆடவர், மரினா பேயின் தடையில்லாத பார்வையை விரும்பியதாக சொத்து நிறுவனமான ஹட்டன்ஸ் குழுமத்தின் திரு எரிக் லிம் கூறினார்.
44 மாடிகளைக் கொண்டுள்ள டவர் 2ன் 26வது மாடிக்கும் 30வது மாடிக்கும் இடையே உள்ள அலுவலக இடத்தின் பரப்பளவு 11,743.52 சதுர அடி. ஒரு சதுர அடிக்கு ஏறக்குறைய $3,300 விலை கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலக இடத்தின் புதுப்பிப்புப் பணிகளும் அதை வாங்கியவரின் உடனடித் தேவைகளுக்கு உகந்ததாக இருந்தது என்றும் திரு லிம் சொன்னார்.
சன்டெக் சிட்டியில் கடைத்தொகுதி, ஐந்து அலுவலகக் கட்டடங்கள், மாநாட்டு நிலையம் ஆகியவை உள்ளன.

