விபத்து: நிறுவனத் தலைமை நிர்வாகிக்கு அபராதம்

விபத்து: நிறுவனத் தலைமை நிர்வாகிக்கு அபராதம்

1 mins read
5afb82ca-5fb3-4196-a96f-f19eaf43ef01
-

கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் காரை ஓட்­டி­ய­போது தாம் செல்லும் வழி­யாக வாக­னங்­கள் வரு­கின்­ற­னவா என்­ப­தைக் கவனிக்­கத் தவ­றி­னார் எஸ்பிஎஸ் டிரான்­சிட் டௌன்­ட­வுன் பாதை­யின் தலைமை நிர்­வாகி அலெக்ஸ் கோய் பெங் குவான், 63 (படம்). இத­னால், அப்­ப­கு­தி­யாக வந்த மோட்­டார்­சைக்­கிள் ஒன்­றின் மீது இவ­ரது கார் மோதி­யது.

அந்த மோட்­டார்­சைக்­கிளை ஓட்­டிய திரு ஹாஷிம் ஹுசேன், 75, என்­ப­வ­ருக்­கும் அவர் பின்­னால் அமர்ந்­தி­ருந்த திரு­மதி சுப்­பா­ரியா சலா­மாட், 69, என்­பவருக்­கும் காயம் ஏற்­பட்­டது. குறிப்­பாக, திரு­மதி சுப்­பா­ரி­யா­வுக்கு உட­லின் பல பகு­தி­களில் எலும்பு முறிவு ஏற்­பட்­டது.

விபத்­துக்­குக் கார­ண­மான அலெக்­சுக்கு நேற்று $4,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. ஐந்து ஆண்­டு­க­ளுக்கு வாக­னம் ஓட்­ட­வும் அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சாலை­யைப் பயன்­ப­டுத்­திய மற்­ற­வர்­க­ளைக் கருத்­தில் கொள்­ளா­மல் வாக­னத்தை ஓட்டி கடு­மை­யான காயம் விளை­வித்த குற்­றத்தை இவர் ஒப்­புக்­கொண்­டார்.

அலெக்ஸ், 1985ல் எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னத்­தில் சேர்ந்­த­தாக அதன் இணை­யப் பக்­கம் குறிப்­பி­டு­கிறது. ரயில் செயல்­பாடு, ஆத­ர­வுப் பிரி­வுத் தலை­வ­ராக இவர் உள்­ளார்.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி 5ஆம் தேதி, கிராஞ்சி விரை­வுச்­சா­லை­யின் துணைச்­சா­லையை நோக்கி, உட்­லண்ட்ஸ் சாலை வழி­யாக அலெக்ஸ் காரை ஓட்­டி­ய­போது இந்த விபத்து நிகழ்ந்­தது.

வலது பக்­கத்­தில் வந்­து­கொண்­டி­ருந்த மோட்­டார்­சைக்­கி­ளு­டன் இவ­ரது கார் மோதி­யது. அலெக்ஸ் காரில் இருந்த கண்காணிப்புக் கருவியில் இந்த விபத்தைக் காட்டும் காட்சி பதிவானது.