தாதிமை இல்லவாசியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தவருக்கு $4,000 அபராதம்

தாதிமை இல்லவாசியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தவருக்கு $4,000 அபராதம்

2 mins read
de49d413-0854-4887-a7f7-9d6e443a63e3
-

தாதிமை இல்­லத்­தில் வசித்து வந்த முதி­ய­வர் ஒரு­வ­ரின் ஏடி­எம் அட்டை­யைத் திருடி, அவ­ரது வங்­கிக் கணக்­கி­லி­ருந்து $1,000 எடுத்த தாதிமை இல்ல ஊழி­யர் ஒரு­வருக்கு நேற்று $4,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. திருட்டு, மோச­டிக் குற்­றச்­சாட்டு­களை அவர் முன்­ன­தாக ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்குத் தண்­டனை விதிப்பின்போது மற்ற இரு குற்றச்­சாட்­டு­களும் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

'உட்­லண்ட்ஸ் கேர் ஹோம்' இல்­லத்­தில் சுகா­தார உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த லதா நாரா­ய­ண­னுக்கு, 2019ல் அந்த 65 வயது ஆட­வ­ரைப் பரா­ம­ரிக்­கும் பொறுப்பு வழங்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் அந்த முதி­ய­வர் உயி­ரிழந்­த­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2019ல், தமது ஏடி­எம் அட்­டை­யின் 'பின்' எண்ணை அந்த ஆடவர் மறந்­தார். புதிய எண்­ணைப் பெற, லதா அந்த ஆட­வரை வங்­கிக்கு அழைத்­துச் சென்­றார்.

லதா முன்­னி­லை­யில் அந்த ஆடவர் புதிய 'பின்' எண்­ணைப் பெற்றுக்­கொண்­டார். தமது கைப்பேசி உறை­யில் உள்ள பாக்கெட்­டில் ஏடி­எம் அட்­டையை வைத்து, கைப்பேசி­யைப் பாது­காப்­பாக வைத்­துக்­கொள்­ளு­மாறு சொல்லி அந்த ஆடவர் லதா­வி­டம் அதை ஒப்­ப­டைத்­தார்.

2019 நவம்­பர் 21ஆம் தேதி, அந்த ஏடி­எம் அட்­டை­யைப் பயன்­படுத்தி, அந்த ஆட­வ­ரின் வங்­கிக் கணக்­கி­லி­ருந்து லதா $1,000 எடுத்­தார்.

நவம்­பர் 25ஆம் தேதி அந்த அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி $73 பெறு­மா­ன­முள்ள உணவு, குளி­ய­ல் அறை பொருள்­களை உட்­லண்ட்­சில் உள்ள பேரங்­காடி ஒன்­றில் லதா வாங்­கி­னார்.

நவம்­பர் 27ஆம் தேதி அந்த முதி­ய­வர் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­த­தைத் தொடர்ந்து லதா­வின் குற்­றங்­கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன. தமது ஏடி­எம் அட்­டை­யைத் தாம் தொலைத்­து­விட்­ட­தா­க­வும் தமது வங்­கிக் கணக்­கி­லி­ருந்து தமக்­குத் தெரி­யா­மல் பணம் எடுக்­கப்­பட்­ட­தா­க­வும் காவல்­து­றை­யி­டம் அந்த ஆட­வர் கூறி­னார்.