மோசடி அழைப்புகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

மோசடி அழைப்புகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

1 mins read
965aa4a0-1ec9-41eb-8cc9-d2ff5bd43903
-

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம், தன்­னி­டம் இருந்து வரு­வ­தா­கக் கூறப்­படும் வாட்ஸ்­அப் மோசடி அழைப்­பு­கள் குறித்து பொது­மக்­களை எச்­ச­ரித்­துள்­ளது.

மோசடி தொடர்­பில், கடந்த ஏழு நாள்­களில் ஆணை­யம் விடுத்­துள்ள மூன்­றா­வது ஆலோ­சனை இது­வாகும்.

வாட்ஸ்­அப்­பில் வெளி­நாட்டு எண்­களில் வரும் இத்­த­கைய அழைப்­பு­கள், '+' குறி­யைக் கொண்­டி­ருக்­கும். உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தின் அதி­கா­ர­பூர்­வச் சின்­ன­மும் இந்த அழைப்­பு­களில் தோன்­றும்.

வாட்ஸ்­அப், டெலி­கி­ராம், வைபர் போன்ற குறுஞ்­செய்­தித் தளங்­கள் மூலம் பொது­மக்­களை ஆணை­யம் அழைக்­காது என அது கூறி­யது.

"இத்­த­கைய அழைப்­பு­க­ளைப் புறக்­க­ணிக்­கு­மா­றும் தங்­கள் தனிப்­பட்ட அல்­லது வங்­கிக் கணக்கு விவ­ரங்­கள் வழங்­கு­வ­தைத் தவிர்க்கு­மா­றும் பொது­மக்­கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர். மூன்­றாம் தரப்பு வங்­கிக் கணக்­கிற்கு பணம் மாற்­றி­வி­டு­வ­தை­யும் தவிர்க்­க­வும்," என்று ஆணை­யம் கூறி­யது.

இத்­த­கைய எண்­க­ளி­லி­ருந்து அழைப்­ப­வர்­க­ளைப் பொது­மக்­கள் முடக்க வேண்­டும்.