அடுத்த கிருமி அலையை கடந்துவர முடியும்

அடுத்த கொவிட்-19 அலையை இந்­தோ­னீ­சி­யா­வால் எதிர்­கொள்ள முடி­யும் என்ற நம்­பிக்கை உள்­ள­தாக அதன் சுகா­தார அமைச்­சர் புடி குணாடி சடிக்­கின் அளித்த பேட்டி ஒன்­றில் கூறி­யுள்­ளார்.

'பிஏ.4', 'பிஏ.5' ஓமிக்­ரான் துணைத் திரி­பு­க­ளால் இந்­தக் கிருமி அலை ஏற்­ப­ட­லாம் என்­றாலும் இந்­தோ­னீ­சி­யா­வில் பெரும்­பாலானோர் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து மீண்டு அதற்கு எதி­ரான எதிர்ப்­பு­சக்­தி­யைக் கொண்­டுள்­ள­னர் அல்­லது கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

அடுத்த மாதம் நிக­ழக்­கூ­டிய அடுத்த கிருமி அலை தொடர்­பில் அவர், "இது 'டெல்டா', 'ஓமிக்­ரான்' அலை­க­ளை­விட மித­மா­ன­தாக இருக்­கும் என்று ஆதா­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்று 'த ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளி­த­ழுக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

முதன்­மு­த­லில் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கண்­ட­றி­யப்­பட்ட 'பிஏ.4', 'பிஏ.5' திரி­பு­கள், தொடக்­கத்­தில் ஏற்­பட்ட ஓமிக்­ரான் அலை­யைக் காட்­டி­லும் மித­மான அள­வில் உச்­சத்­தைத் தொட்­டதே இதற்­குக் கார­ணம் என்று கூறப்­பட்­டது.

இந்­தோ­னீ­சியா-சிங்­கப்­பூர் வர்த்­தக மாநாட்­டி­லும் பின்­னர் அமைச்­சர் பேசி­யி­ருந்­தார்.

அடிப்­ப­டைப் பரா­ம­ரிப்­பில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள் உள்­பட திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட இந்­தோ­னீ­சி­யா­வின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை குறித்து அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

"நமது எண்­ணப் போக்கை மாற்­றிக்­கொள்­வது அவ­சி­யம். உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்ட பிறகு குண­ம­டை­வ­தில் கவ­னம் செலுத்து­வ­தை­விட உடல்­ந­லத்­துடன் இருப்­ப­தில் கவ­னம் தேவை," என்­றார் திரு புடி.

அவ­ரு­டன் கலந்­து­ரை­யா­டல் அங்­கத்­தில் சிங்­கப்­பூ­ரின் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங்­கும் இடம்­பெற்­றி­ருந்­தார்.

சுகா­தா­ரச் செய­லி­கள் போன்ற தொழில்­நுட்ப அம்­சங்­களை அன்­றாட வாழ்க்­கை­யில் பயன்­ப­டுத்­து­வது உள்­பட, கொள்­ளை­நோ­யைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் எடுத்­து­வ­ரும் முயற்­சி­கள் குறித்து அவர் பேசி­னார்.

தற்­போது 'மூத்­தோர் சுனாமி' அலையை சிங்­கப்­பூர் சந்­தித்து வரு­வ­தா­கக் கூறிய அவர், அறு­வரில் ஒரு­வர் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர் என்­றும் 2030ஆம் ஆண்­டுக்­குள் இந்த எண்­ணிக்கை நான்­கில் ஒரு­வர் என்­றா­கி­வி­டும் என்­றும் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்­குப் பிறகு குடும்ப மருத்­து­வர் அல்­லது தனி­யார் மருத்­து­வர் என்ற பிரி­வி­னர், பொதுச் சுகா­தார அமைப்­பு­மு­றை­யின் ஓர் அங்­க­மாக்­கப்­பட்­டது முக்­கி­ய­மா­ன­தொரு கொள்கை மாற்­றம் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!