அடுத்த கொள்ளைநோய்க்கு உலகைத் தயார்நிலையில் வைத்திருக்க புதிய நிதி

அடுத்த கொள்ளைநோய்க்கு உலகைத் தயார்நிலையில் வைத்திருக்க புதிய நிதி

1 mins read
8d3c1e5d-66ef-4ed8-8498-e96f9b5c7571
-

அடுத்த கொள்­ளை­நோய்க்கு உல­கம் தயார்­நி­லை­யில் இருக்க வேண்­டும் என்ற நோக்­கில் அனைத்­து­ல­கத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வாக புதிய இடை­யீட்டு நிதியை 'ஜி-20' நாடு­கள் தொடங்­க­வுள்­ள­தாக இந்­தோ­னீ­சிய நிதி அமைச்­சர் டாக்­டர் ஸ்ரீ முல்­யாணி இந்­தி­ரா­வாத்தி கூறி­யுள்­ளார்.

கொள்­ளை­நோ­யைத் தடுப்­ப­தற்­கான தயார்­நி­லை­யும் கொள்­ளை­நோய்க்கு எதி­ரான செயல்­பா­டும் கொண்ட திட்­டத்தை நாடு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இடையே புதிய நிதி­யும் அதில் அங்­கம் வகிக்­கும் என்று கூறப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் நடந்து வரும் இந்­தோ­னீ­சியா-சிங்­கப்­பூர் வர்த்­தக மாநாட்­டின்­போது அமைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

கொவிட்-19, உல­கம் சந்­திக்­கக்­கூ­டிய இறுதி சுகா­தார நெருக்­கடி அல்ல என்று ஆய்­வு­கள் குறிப்பிடுவதாக டாக்­டர் ஸ்ரீ முல்­யாணி குறிப்­பிட்­டார். அத­னால் அடுத்த நெருக்­க­டி­யைச் சந்­திப்­ப­தற்கு நாடு­கள் ஒன்­று­தி­ரண்டு வர வேண்­டும் என்­றார் அவர்.

பெரு­ம­ள­வில் தொழில்­ம­ய­மாக்­கப்­பட்ட, வளர்ச்சி கண்டு வரும் 19 நாடு­க­ளு­டன் ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் இணைந்து 'ஜி-20' என்று அழைக்­கப்­ப­டு­கின்­றன. இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் வரும் நவம்­ப­ரில் 'ஜி-20' மாநாடு நடை­பெற உள்­ளது.

அனைத்­து­லக சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பை வலு­வாக்­கு­தல், மின்­னி­லக்க உரு­மாற்­றம், எரி­சக்தி நிலை­மாற்­றம் ஆகிய மூன்று முக்­கிய அம்­சங்­களில் 'ஜி-20' இவ்­வாண்டு கவ­னம் செலுத்­தும்.