இந்தோனீசிய அமைச்சர்: உணவுப் பாதுகாப்புக்கு இவ்வாண்டு முன்னுரிமை

இந்தோனீசிய அமைச்சர்: உணவுப் பாதுகாப்புக்கு இவ்வாண்டு முன்னுரிமை

1 mins read
f6d84432-db06-4c64-a8b5-37f0944db2bf
-

உண­வுப் பாது­காப்பு இவ்­வாண்டு 'ஜி-20' நாடு­க­ளுக்கு முக்­கி­ய­மா­ன­தாக, முன்­னு­ரிமை பெறக்­கூ­டிய ஓர் அம்­ச­மாக இருக்­கும் என்று இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரெட்னோ மார்­சுடி கூறி­யுள்­ளார்.

இந்­தோ­னீ­சியா-சிங்­கப்­பூர் வர்த்­தக மாநாட்­டில் பேசிய அவர், கொவிட்-19 தாக்­கத்­தா­லும் உக்­ரே­னில் தொட­ரும் போரா­லும் உண­வுப் பற்­றாக்­குறை மேலும் மோச­மா­க­லாம் என்­றார்.

உண­வுப் பாது­காப்­பின்மை நிலையை இவ்­வாண்டு உல­கின் சுமார் 323 மில்­லி­யன் பேர் எதிர்­நோக்­க­லாம் என்று ஆய்வு ஒன்றை மேற்­கோள் காட்­டி­னார் அமைச்­சர். கொவிட்-19, உக்­ரேன் போர் இரண்­டுக்­கும் முந்­திய நிலையை ஒப்­பிடு­கை­யில் இது இரு மடங்­கா­கும்.