'ஷோப்பி' ஊழியர்கள் சிலர் வேலையிலிருந்து நீக்கப்படுவர்

'ஷோப்பி' ஊழியர்கள் சிலர் வேலையிலிருந்து நீக்கப்படுவர்

1 mins read
adfe4cac-6952-4e3d-8d43-a6ce3af686bc
-

தென்­கி­ழக்­கா­சிய இணைய வர்த்­தக ஜாம்­ப­வா­னா­கக் கரு­தப்­படும் 'ஷோப்பி' நிறு­வ­னம், அதன் ஊழி­யர்­கள் சிலரை வேலை­யி­லி­ருந்து நீக்­க­வுள்­ளது.

நிறு­வ­னத்­தின் 'ஷோப்­பி­ஃபுட்', 'ஷோப்­பிபே' பிரி­வு­களில் உள்ள ஊழி­யர்­கள் சிலர் நீக்­கப்­ப­டு­வர் என்று கூறப்­பட்­டது.

மெக்­சிகோ, அர்­ஜென்­டினா, சிலி ஆகிய நாடு­களில் உள்ள குழுக்­க­ளை­யும் ஸ்பெ­யின் சந்­தைக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வெளி­நாட்டுக் குழு­வை­யும் அது அதே­போல் வேலை­யி­லி­ருந்து நீக்­க­வுள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டது.

குறிப்­பிட்ட சில பிரி­வு­க­ளி­லும் சந்­தை­க­ளி­லும் செயல்­பா­டு­க­ளைச் செம்­மைப்­ப­டுத்த இந்த மாற்­றங்­களைச் செய்­வ­தாக 'ஷோப்பி'யின் தலைமை நிர்­வாகி கிரிஸ் ஃபெங் கூறி­யுள்­ளார்.