அங் மோ கியோ வீட்டில் தீ: மருத்துவமனையில் இருவர்

அங் மோ கியோ வீட்டில் தீ: மருத்துவமனையில் இருவர்

1 mins read
32b4b2e8-33bd-457d-836d-1a86960eab7d
-

தமது வீட்­டில் அதி­காலை 5 மணி­ய­ள­வில் தீ மூண்­டதை அடுத்து அங் மோ கியோ குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் அரக்­கப்­ப­ரக்க வீட்டை விட்டு வெளி­யே­றி­னார். நேற்­றுக் காலை நடந்த இச்­சம்­ப­வத்­தில் வீட்­டின் வர­வேற்­புக் கூட­மும் படுக்கை அறை­யும் தீக்கு இரை­யா­கின.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் வரு­வ­தற்­குள் வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­விட்ட அந்­தக் குடி­யி­ருப்­பா­ளர், சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அவ­ரின் அண்­டை­வீட்­டுக்­கா­ரர் மயங்கி விழுந்­ததை அடுத்து அவர் டான் டோக் சேங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

முன்­னெச்­ச­ரிக்­கை­யாக கட்­ட­டத்­தி­லி­ருந்து சுமார் 50 பேர் வெளி­யேற்­றப்­பட்­ட­தாக அதி­காரி­கள் தெரி­வித்­த­னர். இதற்­கிடையே, தீ மூண்­ட­தற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய விசா­ரணை நடந்து வரு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

படம்: ஸ்டோம்ப்