தொழில்நுட்ப நிறுவனங்கள் செழிக்க சிங்கப்பூர் உகந்த இடம்

தொழில்நுட்ப நிறுவனங்கள் செழிக்க சிங்கப்பூர் உகந்த இடம்

2 mins read
093932a7-8734-4d98-862b-a07de03ee51a
தொழில்நுட்ப நிறுவனங்கள் வெற்றி பெற தேவையான புத்தாக்கம், ஆக்கபூர்வமான ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்புகள் சிங்கப்பூரில் இருப்பதாக தொழில்நுட்பத் தலைவர்களிடம் தெரிவித்தார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் வெற்றி­ க­ர­மா­கச் செயல்­பட்டு செழித்­தோங்க தேவை­யான புத்­தாக்­கம், ஆக்­க­பூர்­வ­மான ஒழுங்­கு­முறை ஆகி­ய­வற்­றுக்­கான உள்­கட்­ட­மைப்பை சிங்­கப்­பூர் வழங்­கு­கிறது என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

லண்டன் தொழில்­நுட்ப வாரத்தை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட நிகழ்ச்­சி­யில் திரு ஹெங் நேற்று கலந்­து­கொண்டு பேசி­னார். பரு­வ­நிலை மாற்­றம், மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை, கிரு­மித்­தொற்­றால் ஏற்­படும் நெருக்­க­டி­நி­லை­கள் போன்ற சவால்­களை மக்­கள் எதிர்­கொள்­வ­தா­க­வும் அவர்­க­ளது வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­தும் வாய்ப்பு தொழில்­நுட்­பத்­துக்கு இருப்­ப­தா­க­வும் திரு ஹெங் கோடிட்­டுக்

காட்­டி­னார்.

சவால்­க­ளுக்குத் தீர்வு காண புத்­தாக்­கம் மிக­வும் முக்­கி­யம் என்­றார் அவர். அதன்­படி டெக்.பாஸ் போன்ற திட்­டங்­க­ளின்­கீழ் வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­களை சிங்­கப்­பூர் வர­வேற்­ப­தாக அவர் கூறி­னார்.

வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த உயர்­த­ரத் தொழில்­நுட்­பத் தொழில்­மு­னை­வர்­க­ளுக்­கும் தலை­வர்­க­ளுக்­கும் இந்த டெக்.பாஸ் விசா வழங்­கப்­ப­டு­கிறது.

ஸ்டார்ட்­அப் எஸ்ஜி போன்ற வழி­காட்­டு­தல், மானி­யங்­கள் ஆகி­ய­வற்றை வழங்­கும் திட்­டங்­கள் மூலம் சமூ­கத்தை மேம்­ப­டுத்த சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். கடந்த ஆண்­டில் மட்­டும் சிங்­கப்­பூரை மைய­மா­கக் கொண்ட புதிய நிறு­வ­னங்­கள் $15 பில்­லி­யன் திரட்­டி­ய­தா­கத் துணைப் பிர­த­மர் கூறி­னார்.

லண்­டன் உட்­பட உல­கெங்­கும் 15க்கும் அதி­க­மான முக்­கிய மையங்­க­ளு­டன் புதிய நிறு­வ­னங்­களை இணைக்­கும் சிங்­கப்­பூ­ரின் உல­க­ளா­விய புத்­தாக்­கக்

கூட்­ட­ணிக் கட்­ட­மைப்பை திரு ஹெங் சுட்­டி­னார்.

அது­மட்­டு­மல்­லாது, புத்­தாக்­கம் மற்­றும் தொழில்­நுட்ப வாரத்தை முன்­னிட்டு நடத்­தப்­படும் நிகழ்ச்­சி­ களை சிங்­கப்­பூர் ஆண்­டு­தோ­றும் ஏற்று நடத்­து­வ­தாக அவர் கூறி­னார்.

இந்­நி­கழ்ச்சி இவ்­வாண்டு அக்­டோ­பர் மாதம் நடை­பெ­று­கிறது. ஆலோ­ச­னை­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள உத­வும் வகை­யில் இந்­நி­கழ்ச்சி நடத்­தப்­ப­டு­வ­தாக திரு ஹெங் தெரி­வித்­தார்.

புத்­தாக்­கம் செழித்­தோங்க ஆக்­க­பூர்வ ஒழுங்­கு­முறை நடப்­பில் இருப்­பது மிக­வும் அவ­சி­யம் என்­பதை திரு ஹெங் வலி­யு­றுத்­தி­னார்.

கணி­னி­யின் கட்­ட­மைப்பை மாற்­று­வது, ஊடு­ரு­வ­தல் போன்­ற­வற்­றி­லி­ருந்து கடி­ன­மாக அல்­லது சாத்­தி­ய­மில்­லாத வகை­யில் தக­வல்­க­ளைப் பாது­காத்து பதிவு செய்­யும் முறை­யான புளோக்­செ­யின் தொழில்­நுட்­பத்­தில் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லம் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

நிறு­வ­னங்­க­ளின் பார்வை ஆசிய சந்­தை­களில் பொது­வாக சீனா, இந்­தியா, தென்­கொ­ரியா போன்ற நாடு­களை நோக்­கித் திரும்­பு­வ­தா­க­வும் அவற்­றைத் தாண்டி மற்ற நாடு­க­ளி­லும் வர்த்­த­கத்தை விரி­வு ­ப­டுத்­து­வது குறித்து அவை பரி­

சீ­லனை செய்ய வேண்­டும் என்றும் திரு ஹெங் அழைப்பு விடுத்­தார்.

660 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் வாய்ப்­பு­கள் அதி­கம் இருப்­ப­தாக நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­வர்­

க­ளி­டம் அவர் கூறி­னார்.

விரை­வாக மேம்­பட்­டு­வ­ரும் நடுத்­தர வர்க்­கத்­தி­னர், மின்­னி­லக்­கத் திறன்­கள் அதி­கம் உள்ள இளை­ஞர்­கள் ஆகி­ய­வற்றை தென்­கி­ழக்­கா­சிய நாடு­கள் கொண்­டி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

அத்­து­டன், 2025ஆம் ஆண்­டுக்­குள் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளின் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் இரு­

ம­டங்கு அதி­க­ரித்து 360 மில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்­கும் அதி­க­மாக உய­ரும் என்று முன்­னு­ரைக்­கப்

­ப­டு­வ­தாக திரு ஹெங் கூறி­னார்.

தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களை அமைக்க விரும்­பு­வோ­ருக்கு சிங்­கப்­பூர் மிக முக்­கி­ய­மான நுழைவாயிலாக அமை­யும் என்று நிகழ்ச்­சி­யில் நேர­டி­யா­க­வும் மெய்­நி­கர் மூல­மா­க­வும் பங்­கேற்ற தொழில்­நுட்­பத் தலை­வர்­க­ளி­டம் திரு ஹெங் தெரி­வித்­தார்.