உலகெங்கும் விமானத் துறை அடுத்த ஆறிலிருந்து 12 மாதங்
களுக்கு ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் திரு இஸாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் ஊழியர் பற்றாக்குறையால் சிரமப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்ட திரு இஸாம், ஆசியான் நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று கூறினார்.
"அனைத்து விமானச் சேவைகளும் நிலையற்ற தன்மையுடன் இருக்கின்றன. இதனால் அவற்றால் புதிய ஊழியர்களை ஈர்க்க முடியவில்லை. கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது நாங்கள் ஆட்
குறைப்பு செய்தோம். ஆனால் இப்போது வேலைக்குத் திரும்புமாறு அவர்களை அழைக்கும்போது அவர்கள் ஒன்றுக்குப் பலமுறை யோசிக்கின்றனர்," என்று திரு இஸாம் கூறினார்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடத்தப்பட்ட ஆசிய விமானத் துறை விழாவில் கலந்துகொண்டு விமானத் துறை பிரதிநிதிகளுடன் திரு இஸாம் இத்தகவல்களைப்
பகிர்ந்துகொண்டார்.
முன்னாள் விமானத் துறை ஊழியர்களில் சிலர் தற்காலிக வேலை, குறுகிய காலப் பணிகள் ஆகியவற்றுக்கு மாறிவிட்டதாக திரு இஸாம் தெரிவித்தார்.
எனவே, இத்தகைய விவ
காரங்களுக்குத் தீர்வு காண
விமானத் துறையும் அரசாங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
அப்போதுதான் விமானத் துறைக்கு ஊழியர்களை மீண்டும் ஈர்க்க முடியும் என்று அவர் கூறினார். விமான நிலையங்களில் வேலை செய்யவும் ஊழியர்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்
பிட்டார்.
"போதிய வளங்கள் இல்லாமல் விமானத் துறை திண்டாடுகிறது. முன்பு இருந்த நிலைக்கு விரைவாகத் திரும்ப நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை," என்று திரு இஸாம் வருத்தம் தெரிவித்தார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, ஆசியான் நாடுகளில் விமானப் போக்குவரத்தின் மீட்சி பெருமளவில் மேம்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த விமானப் போக்கு
வரத்தில் 50 விழுக்காட்டை இம்மாதம் எட்ட சிங்கப்பூர் கொண்டுள்ள இலக்கு நிறைவேற இருக்கிறது. கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு இருந்த ஊழியர் எண்ணிக்கையில் 85லிருந்து 90 விழுக்காட்டை இவ்வாண்டு
இறுதிக்குள் அடைய உள்ளூர் விமானத் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஊழியர் பற்றாக்குறையைத் தவிர்த்து, அதிகரிக்கும் பணவீக்கம், எரிபொருள் விலை ஏற்றம் ஆகியவற்றாலும் விமானத் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக திரு இஸாம் கூறினார்.

