வெளிநாட்டு ஊழியர்களை நோக்கிப் பாய்ந்த சுடுசொற்கள்; தூற்றிய ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

வெளிநாட்டு ஊழியர்களை நோக்கிப் பாய்ந்த சுடுசொற்கள்; தூற்றிய ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

2 mins read
5b2e03b2-665b-422c-86b9-28454145af4e
-

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைத் தூற்­றி­ய­தாக சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது. வழக்கை விசா­ரித்த நீதி­மன்­றம் அவர் செய்­தது குற்­றம் எனத் தீர்ப்­

ப­ளித்­தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி­யன்று தோ பாயோ லோரோங் 5ல் நடந்­து­கொண்­டி­ருந்த கட்­டு­மான பணி­கள் தொடர்­பாக அளவு எடுக்­கும் பணி­யில் திரு ரத்­ன­சிங்­கம் ஜதீ­சன், திரு கிருஷ்­ணன் கார்த்­தி­கே­யன் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது மழை பெய்­யத் தொடங்­கி­ய­தால் அரு­கில் இருந்த பொதுத் தாழ்­வா­ரத்­தில் இரு­வ­ரும் ஒதுங்­கி­னர்.

அப்­போது சிங்­கப்­பூ­ர­ரான 56 வயது லீ போ கியான் அவர்­கள் இரு­வ­ரை­யும் தூற்­றி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. லீ தங்­களை அவ­மா­னப்­ப­டுத்­து­வதை திரு ரத்­ன­சிங்­கம் காணொளி எடுத்­தார்.

பாதிக்­கப்­பட்ட இரு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் எந்த நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் என்­பதை நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பி­ட­வில்லை.

"நீங்­கள் என் நாட்­டுக்கு வந்­தது தவறு. இந்த அர­சாங்­கம் சட்­ட­வி­ரோ­த­மா­னது. உங்­களை நாங்­கள் விரட்­டி­ய­டிப்­போம்," போன்ற சுடு­சொற்­களை லீ சர­மா­ரி­யாக அவிழ்த்து­விட்­டார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளால் சிங்­கப்­பூ­ரில் குற்­றச் செயல்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் பல இடங்­களில் கூட்ட நெரி­சல் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் திரு ரத்­ன­சிங்­கம், திரு கிருஷ்­ணன் ஆகிய இரு­வ­ரை­யும் பார்த்து லீ கத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ்­வாறு கூறு­வ­தற்கு தமக்கு அனைத்து உரி­மை­களும் உள்­ளன என்று லீ நம்­பி­ய­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு முன்பு லீயி­டம் பேசி­ய­தில்லை என்று பாதிக்­கப்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தெரி­வித்­த­னர். லீ பயன்­ப­டுத்­திய கடு­மை­யான சொற்­கள் தங்­க­ளுக்கு மன­வு­ளைச்­சலை அளித்­த­தாக இரு­வ­ரும் கூறி­னர்.

மன­வே­தனை ஏற்­பட்­டது ஒரு­புறம் இருக்க, அவ­மா­னத்­தால் கூனிக் குறுகி நிற்­கும் நிலை ஏற்­பட்­ட­தா­க­வும் திரு கிருஷ்­ணன் தெரி­வித்­த­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

லீயின் செயல் தம்­மைக் கவலை அடை­யச் செய்­த­தா­க­வும் மன­ உளைச்­சலை ஏற்­ப­டுத்­தி­ய­தா­க­லும் திரு ரத்­ன­சிங்­கம் கூறி­ய­தா­க­வும் அவர் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின்­கீழ் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் தமது அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தும் உரிமை தமக்கு இருப்­ப­தாக லீ உறு­தி­யாக நம்­பி­ய­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் கூறி­னார். ஆனால் அத்­த­கைய உரிமை இல்­லவே இல்லை என்­றார் அவர்.

தொல்லை விளை­வித்­தல், கொவிட்-19 தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­தின்­கீழ் பொது இடத்­தில் முகக்­க­வ­சம் அணி­யா­தது ஆகிய குற்­றங்­களை லீ புரிந்­த­தாக மாவட்ட நீதி­பதி சே யுவேன் ஃபாட் நேற்று தீர்ப்­ப­ளித்­தார்.

திரு ரத்­ன­சிங்­கத்­தை­யும் திரு கிருஷ்­ண­னை­யும் லீ நெருங்­கி­ய­போது அவர் முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை.

இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று லீக்­குத் தண்­டனை விதிக்­கப்­படும்.