விற்றுத்தீர்ந்தன ஜோகூர்பாரு - உட்லண்ட்ஸ் ரயில் சேவைக்கான வாரயிறுதி டிக்கெட்டுகள்

விற்றுத்தீர்ந்தன ஜோகூர்பாரு - உட்லண்ட்ஸ் ரயில் சேவைக்கான வாரயிறுதி டிக்கெட்டுகள்

1 mins read
91ae507b-eac8-467b-9eab-e8ceb99735eb
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

ஜோகூர்பாருவுக்கும் உட்லண்ட்சுக்கும் இடையிலான கேடிஎம் ரயில் சேவைக்கான அனைத்து வாரயிறுதி டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளன. சேவை ஜூன் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. வெள்ளிக்கிழமை மாலை, சனிக்கிழமை காலை, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆகிய வாரயிறுதி நேரங்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் இருவழி மொத்தம் 31 சேவைகள் இருப்பதால், உச்சக்கட்டம் அல்லாத நேரங்களுக்காக டிக்கெட்டுகள் நிறையவே இருக்கின்றன.

ஜோகூர் பாருவிலிருந்து பயணம் செய்பவர்கள் 5 ரிங்கிட் (1.56 வெள்ளி) செலுத்த வேண்டும். உட்லண்ட்சிலிருந்து ஜோகூர் பாரு செல்பவர்கள் 5 வெள்ளி செலுத்த வேண்டும். உட்லண்ட்சிலிருந்து ஜோகூருக்குச் செல்ல ரயிலில் வெறும் ஐந்தே நிமிடங்கள் பிடிக்கிறது. கொவிட்-19 தொற்றுக் காரணத்தினால் மார்ச் 2020லிருந்து இந்தச் சேவை ரத்துசெய்யப்பட்டது.