சிங்கப்பூரில் வீட்டு வாடகை விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இந்தப் போக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கும் கூட்டுரிமை வீடுகளுக்கும் பொருந்தும். வீவக வீட்டு வாடகை விலை 2.4 விழுக்காடு உயர்ந்து. கூட்டுரிமை வீட்டு வாடகை விலை 2.8 விழுக்காடு அதிகரித்தது.
வீவக வீட்டுக்கான வாடகை தொடர்ந்து 23வது மாதமும், கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து 17வது மாதமும் உயர்ந்தன.
வீட்டு வாடகை விலை தொடர்ந்து ஏகிறும் என சொத்துச் சந்தை நிபுணர்கள் நம்புகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கியிருப்பதால், வாடகைக்கான தேவை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது.

