குடும்பச் சேவை நிலையங்கள் சென்றாண்டு 338 முதியோர் துன்புறுத்தப்படும் சம்பவங்களை விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட் டது. இந்த எண்ணிக்கை 2020ல் 283ஆக இருந்தது. மேலும், 2019ல் அந்த எண்ணிக்கை 232 என பதிவுசெய்யப்பட்டது. குடும்ப வன்முறை பற்றி பொதுமக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டி ருப்பதால் அது பற்றி அதிகம் பேர் புகார் தெரிவிக்கக் காரண மாக இருக்கலாம் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியது. மக்கள்தொகை வேகமாக மூப்படையும் நிலையில், தங்களைத் தாங்களே பாது காத்துக்கொள்ள இயலாத மூத்தோர் துன்புறுத்தப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றது அமைச்சு. பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண்களே துன்புறுத்த லுக்கு ஆளாவதாகவும் அவர்களைத் துன்புறுத்துபவர் களில் 90 விழுக்காட்டினர் கண வர், பிள்ளைகளை உள்ளடக்கிய குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துன்புறுத்தலுக்கு அதிகம் ஆளாகும் மூதாட்டியர்
1 mins read
-

