செந்தோசாத் தீவில் சூரிய சக்தி மின்சாரம்

செந்தோசாத் தீவில் சூரிய சக்தி மின்சாரம்

1 mins read
6b61e98b-8f22-45da-bb6a-c15030fa66d8
-

செந்­தோ­சா­வில் உள்ள 18 தளங்­கள் விரை­வில் சூரி­ய­சக்தி மூலம் மின்­சா­ரம் பெற்று மின்ன உள்­ளன. இவற்­றில் சுற்­றுப்­ப­ய­ணி­கள் உட்­பட பெரும்­பா­லா­னோ­ரைக் கவர்ந்த 'யுனி­வெர்­சல் ஸ்டு­டி­யோஸ் சிங்­கப்­பூ­ரும்' ஒன்று. உல்­லாச ஓய்­வுத் தீவை சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்­த­தாக மாற்­றும் முயற்­சி­களில் ஒன்­றாக இந்த ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கிறது.

யுனி­வெர்­சல் ஸ்டு­டி­யோ­ஸில் உள்ள 'ரிவெஞ்ச் ஆஃப் த மம்மி' ரோலர் கோஸ்­டர் பாதை போன்­ற­வற்­றில் இம்மாதம் சூரி­ய­சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­பட உள்­ளன.

போது­மான சூரிய வெளிச்­சம், கட்­ட­டங்­க­ளின் புதுப்­பிப்­புத் தன்மை போன்­ற­வற்­றின் அடிப்­ப­டை­யில் சூரிய சக்தி மின்­சா­ரத்­துக்­கான தளங்­கள் தெரிவு செய்­யப்­பட்­ட­தாக செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

தீவின் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்­தி­யில் 10 விழுக்­காட்­டைப் பூர்த்தி செய்ய இக்­க­ழ­கம் இலக்கு கொண்­டுள்­ளது.

அடுத்த ஆண்­டில் சூரி­ய­சக்­தித் தக­டு­கள் பொருத்­தும் பணி நிறை­வு­பெற்­ற­தும் ஆண்டு முழு­வ­தம் 60,000 ஹோட்­டல் அறை­க­ளில் உரு­வாகும் கரிம வெளி­யேற்­றத்­தின் அளவை ஒட்­டு­மொத்­த­மா­கக் குறைக்க முடி­யும் என்று கழ­கம் நம்­பு­கிறது.