உச்ச விலையாக $41.68 மில்லியனுக்கு விற்கப்பட்ட சிங்கப்பூர் காப்பிக் கடை

உச்ச விலையாக $41.68 மில்லியனுக்கு விற்கப்பட்ட சிங்கப்பூர் காப்பிக் கடை

1 mins read
35792fbd-2f5f-4af9-9485-76a50f431567
தெம்பனீசில் உள்ள அந்தக் காப்பிக் கடை 604 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதில் 18 கடைகள் உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் உள்ள ஒரு காப்பிக் கடை உச்ச விலையாக 41.68 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது.

தெம்பனீஸ் ஸ்த்ரீட் 21 பிளோக் 201ல் உள்ள 21 ஸ்த்ரீட் ஈட்டிங் ஹவுஸ் அந்தக் கடையாகும்.

ஏப்ரல் மாதத்தில் காப்பிக் கடை தொடர்பாக சிங்கப்பூர் நில ஆணையத்திடம் முன்னறிவிப்பை ஜிஅண்ட்ஜி எனும் நிறுவனம் பதிவு செய்தது.

விற்பனை அடுத்த மாதம் நிறைவு அடையும் என்று கூறப்பட்டது.

604 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தக் காப்பிக் கடையில் 18 கடைகள் உள்ளன. அதன் குத்தகை காலத்தில் இன்னும் 76 ஆண்டுகள் எஞ்சியுள்ளன.

இதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு புக்கிட் பாத்தோக் ஸ்த்ரீட் 11ல் உள்ள ஒரு காப்பிக் கடை 31 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது.

தெம்பனீஸ் காப்பிக் கடையை வாங்கிய நிறுவனத்தின் இயக்குநர் 7 ஸ்டார்ஸ் காப்பி கடைகள், யூ ஸ்டார்ஸ் பேரங்காடிக் கடைகள் ஆகியவற்றின் உரிமையாளர் என்று அரசாங்க ஆவணங்கள் கூறின.

இந்நிலையில் ஏப்ரலில் அந்தக் காப்பிக் கடையில் வாடகைகள் இரட்டிப்பானதாக சில வாடகைதாரர்கள் கூறினர்.

அதனால் காப்பிக் கடையை விட்டு வெளியேறுவது பற்றி அவை சிந்தித்து வருகின்றன.