பொதுக் கலந்துரையாடல் நிகழ்வுகளில் கருத்து சேகரிப்பு

தங்கள் தேவைக்கேற்ற சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தை விரும்பும் மூத்தோர்

தங்­க­ளது தேவை­க­ளுக்கு ஏற்­றாற்­போல் வரையப்­படும் சுகா­தா­ரப் பரா­மரிப்­புத் திட்­டத்­தைப் பெற மூத்தோர் விரும்­பு­கின்­ற­னர். மன­நல விவ­காரங்­க­ளைக் கையா­ளு­வ­தில் பொது மருத்­து­வர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­வதை இளை­யர்­கள் விரும்­பு­கின்­ற­னர்.

சுகா­தார அமைச்­சின் 'ஆரோக்­கி­யமான சிங்­கப்­பூர்' உத்­தி­யின்­கீழ் நடை­பெற்று வரும் பொதுக் கலந்து­ரை­யா­டல் நிகழ்­வு­களில் கண்­ட­றி­யப்­பட்ட அம்­சங்­கள் இவை என்று சுகா­தார இரண்­டாம் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­தார்.

தேசிய நூல­கத்­தில் அத்­த­கைய ஒரு நிகழ்­வில் நேற்று முன்தினம் கலந்­து­கொண்டு அவர் பேசி­னார்.

ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பை வழங்க இலக்கு கொண்­டி­ருக்­கும் 'ஆரோக்­கி­யான சிங்­கப்­பூர்' உத்தியை வடி­வ­மைக்க உதவும் வகையில் பொது­மக்­கள் இத்­த­கைய நிகழ்ச்­சி­களில் தங்­கள் கருத்­து­களைத் தெரி­வித்­த­னர்.

இந்த உத்­தி­யின் மற்­றொரு முக்கிய அம்­ச­மாக, ஒவ்­வொ­ரு குடி­யி­ருப்­பா­ள­ருக்­கும் குடும்ப மருத்­து­வர் ஒரு­வர் நிய­மிக்­கப்­ப­டு­வார். அவ­ருக்­காக அந்த மருத்­து­வர் சுகா­தா­ரத் திட்­டம் ஒன்றை வகுப்­பார் என அமைச்­சர் மச­கோஸ் தெரி­வித்­தார்.

"குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஆரோக்­கி­ய­மாக இருந்­தால், அவர்­க­ளு­டைய ஆரோக்­கி­யத்தை எப்­படி கட்­டிக்­காப்­பது என்­ப­தி­லும் நாள்பட்ட நோய்­க­ளைத் தவிர்ப்­பது எப்­படி என்­ப­தி­லும் இத்­திட்­டம் கவ­னம் செலுத்­தும்.

"நாள்பட்ட நோய்­கள் உடை­யோர், அவை மோச­ம­டை­யா­மல் எப்­படி சமா­ளிப்­பது என்­பதையும் இந்தத் திட்டம் உள்­ள­டக்­கும்," என்று அமைச்­சர் மச­கோஸ் விவ­ரித்­தார்.

கடந்த மே மாதத்­தி­லி­ருந்து ஐந்து பொதுக் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­கள் நேர­டி­யாக நடத்­தப்­பட்­டுள்­ளன. இது­வரை ஏறக்­கு­றைய 500 பேர் இவற்­றில் கலந்­து­கொண்டு பல்வேறு கருத்துகளைக் கூறி உள்­ள­னர்.

இது­போக, இணை­யத்­தில் நடத்­தப்­படும் கருத்­தாய்­வு ஒன்­றி­லும் கருத்­து­கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடை­பெ­றும் இந்­தக் கருத்­தாய்­வில் இது­வரை 1,800க்கும் அதி­க­மான கருத்­து­கள் பெறப்­பட்டு உள்­ளன.

பெறப்­படும் கருத்­து­கள் ஆரா­யப்­பட்டு வெள்ளை அறிக்­கை­யில் உள்­ள­டக்­கப்­படும். பின்­னர் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்டு அது­கு­றித்து விவா­திக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!