நேரடிப் பயிற்சியில் ஈடுபடும் சிங்கப்பூர், அமெரிக்க ராணுவங்கள்

நேரடிப் பயிற்சியில் ஈடுபடும் சிங்கப்பூர், அமெரிக்க ராணுவங்கள்

1 mins read
8cdcafa0-2457-498e-a08e-f0bfbbaa76f4
முராய் நகர்ப்புற பயிற்சி மையத்தில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள். ஜூன் 6ஆம் தேதி முதல் இன்று வரை இந்தப் பயிற்சி நடவடிக்கை இடம்பெறுகிறது. படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்­கப்­பூர் ராணு­வம், அமெ­ரிக்க ராணு­வத்­தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்­பட்ட ராணுவ வீரர்­கள் 'எக்­சர்­சைஸ் டைகர் பாம் 2022' எனும் ஒருங்­கி­ணைந்த நகர்ப்புற பயிற்சி நட­வடிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­வ­தாக தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­து உள்­ளது.

முராய் நகர பயிற்சி மையத்­தில் ஜூன் 6ஆம் தேதி முதல் இன்று வரை இந்­தப் பயிற்சி நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

1981ல் முதன்­மு­றை­யாக நடத்­தப்­பட்ட 'எக்­சர்­சைஸ் டைகர் பாம்', இருநாட்டு ராணு­வங்­க­ளுக்கு இடை­யில் நடத்­தப்­பட்டு வரும் நீண்­ட­கால பயிற்சி நட­வ­டிக்­கை­யா­கும்.

கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லுக்­குப் பிறகு இந்­தப் பயிற்சி நேர­டி­யாக நடத்­தப்­ப­டு­வது இதுவே முதன்­முறை.

இதற்கு முன்­ன­தாக 2019ல் இடம்­பெற்ற நேர­டிப் பயிற்சி நட­வடிக்­கை­யில் 700க்கும் மேற்­பட்ட ராணுவ வீரர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக 2020ல் இந்­தப் பயிற்சி ரத்து செய்­யப்­பட்­டி­ருந்­தது. கடந்த ஆண்டு இது மெய்­நி­கர் வாயி­லாக நடத்­தப்­பட்­டது.

'எக்­சர்­சைஸ் டைகர் பாம்' ஒரு­பு­ற­மி­ருக்க, சிங்­கப்­பூர், அமெ­ரிக்க ராணு­வங்­கள் நிபு­ணத்­து­வப் பரி­மாற்­றத் திட்­டங்­கள் மூல­மும் பயிற்சி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­ற­ன.