பலூனை திரும்பப் பெற்றுக்கொண்ட விவகாரம்: மன்னிப்புக் கோரிய 'ஏஐஏ' காப்புறுதி நிறுவனம்

பலூனை திரும்பப் பெற்றுக்கொண்ட விவகாரம்: மன்னிப்புக் கோரிய 'ஏஐஏ' காப்புறுதி நிறுவனம்

2 mins read
ea2acbaa-6366-4277-adbf-d0b201d6f482
-

கடைத்­தொ­குதி ஒன்­றில் இரண்டு வய­துச் சிறு­மி­யி­டம் கொடுத்த பலூ­னைக் காப்­பு­றுதி முக­வர் ஒரு­வர் திரும்­பப் பெற்­றுக்­கொண்ட விவ­கா­ரத்­தில் காப்­பு­றுதி நிறு­வ­ன­மான ஏஐஏ சிங்­கப்­பூர் மன்­னிப்பு கேட்டுக்­கொண்­டுள்­ளது.

தெம்­ப­னி­சில் உள்ள செஞ்­சுரி ஸ்கு­வேர் கடைத்­தொ­கு­தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வம் குறித்து நஸ்­ரின் ஒகிசி எனும் ஃபேஸ்புக் பய­னா­ளர் ஒரு­வர் பதிவு ஒன்றை வெளி­யிட்­டார்.

தம் மகளை அணு­கிய காப்­புறுதி முக­வர், அவ­ளி­டம் பலூன் ஒன்றை வழங்­கி­ய­தாக திரு­மதி நஸ்­ரின் குறிப்­பிட்­டார்.

"என்­னி­டம் சில கேள்­வி­க­ளைக் கேட்க முடி­யுமா என்று அந்த மாது கேட்­டார். அவர் ஏஐஏ காப்­பு­றுதி நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர் என்­பதை நான் அறிந்­தேன்.

"எனி­னும், நான் அளித்த பதிலில் இருந்து, அவர்­கள் தேடும் வாடிக்­கை­யா­ளராக நான் இல்­லா­ததை அறிந்த அந்த முக­வர், மன்­னிப்பு கூறி­விட்டு என மக­ளி­டமி­ருந்து பலூ­னைத் திரும்­பப் பெற்றுக்­கொண்­டார்," என்று திரு­மதி நஸ்­ரின் சொன்­னார்.

பின்­னர், இந்­தச் சம்­ப­வம் பற்றித் தெரி­யாத வேறொரு முக­வர், தம் மக­ளி­டம் பலூனை வழங்க முன்­வந்­த­தாக திரு­மதி நஸ்­ரின் கூறி­னார்.

தம் மக­ளி­டம் பலூனை வழங்கி, பின்­னர் அவர்­கள் எதிர்­பார்க்­கும் வாடிக்­கை­யா­ள­ராக தாம் இல்லை என்பதைக் கண்­ட­றிந்­த­தும் பலூ­னைத் திரும்ப வாங்­கிக்­கொள்­ளக் கூடாது என்று அந்த இரண்­டா­வது முக­வரி­டம் திரு­மதி நஸ்­ரின் கூறி­னார்.

இது­கு­றித்து தம் மேலா­ள­ரி­டம் சென்று கேட்டு வந்த அந்த முகவர், தம் மக­ளி­டம் பலூனை வழங்க இய­லாது எனக் கூறி­விட்­ட­தாக திரு­மதி நஸ்­ரின் சொன்­னார்.

இந்­தச் சம்­ப­வத்தை "அரு­வ­ருப்­பா­னது" என்று வர்­ணித்த அவர், ஏஐஏ நிறு­வ­னத்­து­டன் தாம் ஒரு­போ­தும் காப்­பு­றுதி எடுத்­துக்­கொள்­ளப் போவ­தில்லை எனக் கூறி­னார்.

இது­கு­றித்து ஏஐஏ சிங்­கப்­பூர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், "விரும்­பத்­த­காத இந்த அனு­ப­வத்­துக்­காக நாங்­கள் மன்­னிப்பு கோரு­கி­றோம். இதில் சம்­பந்­தப்­பட்ட எங்­கள் ஊழி­யர்­க­ளுக்கு நாங்­கள் ஆலோசனை வழங்­கி­யுள்­ளோம்," என்று கூறி­யது.