ஓரினச் சேர்க்கை எதிர்ப்புச் சட்டம்: ஆதரவு 44% என்கிறது ஆய்வு

ஓரினச் சேர்க்கை எதிர்ப்புச் சட்டம்: ஆதரவு 44% என்கிறது ஆய்வு

1 mins read
0d0c022c-cbd9-4713-a0e6-d79be780ef7c
-

ஓரினச் சேர்க்கையை குற்றம் என்று வகைப்படுத்தும் ஒரு சட்டத்திற்கு சிங்கப்பூரில் பாதிப்பேருக்கும் குறைவானவர்களே ஆதரவு தருகிறார்கள் என்பது ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்து இருக்கிறது.

ஓரினச்சேர்க்கை தொடர்பிலான மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதயே இது குறிக்கிறது.

'இப்சோஸ்' என்ற நிறுவனம் 500 பேரை உள்ளடக்கி அந்த ஆய்வை நடத்தியது. குற்றவியல் தண்டனைச் சட்டம் 377ஏ பிரிவை ஆதரிப்போர் 44% என்கிறது ஆய்வு.

இதேபோன்ற ஓர் ஆய்வு 2018ல் நடத்தப்பட்டது. அப்போது சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் 55% ஆக இருந்தனர். அதேவேளையில், அச்சட்டத்தை எதிர்ப்போர் அளவு 2018ல் 12% ஆக இருந்தது. இப்போது 20% ஆகக் கூடியுள்ளது.