இந்த மாதம் வெளியே செல்லும்போது குடையை மறக்கவேண்டாம்

இந்த மாதம் வெளியே செல்லும்போது குடையை மறக்கவேண்டாம்

1 mins read
e99af12e-d035-4510-8644-f6596fc8ebbc
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூன் மாதம் முழுவதும் சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் 34 டிகிரி செல்சியசை எட்டும் எனக் கூறப்பட்டது.

இரவில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்வரை இருக்கும்.

இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் வெப்பநிலை சற்று தணிந்திருந்தது.

ஜூன் 8ஆம் தேதி பயா லேபார் வட்டாரத்தில் ஆக அதி­க­மாக 35.1 டிகிரி செல்­சி­யஸ் பதிவானது.