தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழுங்கிய பூனையைப் பாதி வழியில் கக்கிய மலைப்பாம்பு

1 mins read
3ee6a6ed-8566-46b9-a723-d9a8c8c595b9
படம்: பேஸ்புக் -

ஒரு பூனையை அப்படியே முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு அதை உண்ணமுடியாமல் பாதியிலேயே வெளியே கக்கியது.

பூன் லே வட்டாரத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.

இந்தக் காட்சியை படம்பிடிக்க தொடங்கியபோது, பாம்பின் வாயில் பூனையின் தலையும் மேல்பாதி உடலும் இருந்தது. இந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக பாம்பு பூனையை வெளியே கக்கத் தொடங்கியது.

இந்த வினோதத்தைப் பார்க்க சாலையோரம் ஒரு கூட்டம் கூடியது.

கக்கிய பூனையை அப்படியே சாலையோரம் விட்டுவிட்டு ஒரு வடிக்காலுக்குள் ஊர்ந்துசென்றது பாம்பு.

பூனையின் சடலம் பின்னர் அப்புறப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் மலைப்பாம்புகளைக் காண்பது அசாதாரணமல்ல.

அவை பெரும்பாலும் எலி, குருவி போன்ற சிறிய மிருகங்களை வேட்டையாடுகின்றன. சில சமயங்களில் பூனைகளையும் அவை வேட்டையாடுவது உண்டு.