யீஷூனில் உள்ள ஒரு காப்பிக் கடை 40 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது. ஈசூன் ஸ்த்ரீட் 81 பிளோக் 848ல் உள்ளது இந்தக் காப்பிக் கடை.
தெம்பனீசில் உள்ள ஒரு காப்பிக் கடை உச்ச விலையாக 41.68 மில்லியன் வெள்ளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் விற்கப்பட்டது.
ஒரு சதுர மீட்டர் பரப்பளவுக்கான விலையை எடுத்துகொண்டால், யீஷூன் கடையின் விலை $9,361. ஒப்புநோக்க, தெம்பனீஸ் கடைக்கான விலை $6,964. 397 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட யீஷூன் காப்பிக் கடை, தெம்பனீஸ் காப்பிக் கடையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு சிறியது.
இதன் குத்தகை காலத்தில் இன்னும் 78 ஆண்டுகள் எஞ்சியுள்ளன.
காப்பிக் கடைகள் பல மில்லியன் வெள்ளியில் கைமாற்றப்பட்டு வந்தாலும், சாப்பாடு விலைகள் கணிசமாக உயர்த்தப்படமாட்டா என உணவுக் கடை அமைப்புகள் நம்புகின்றன.

