போதைப் பொருள் நடவடிக்கைகளில் 146 பேர் கைது

போதைப் பொருள் நடவடிக்கைகளில் 146 பேர் கைது

1 mins read
3983ea9a-851f-4f16-8341-584237dce977
படங்கள்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -
multi-img1 of 3

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இரண்டு வாரங்களாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் 146 பேர் போதைப் பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், $55,000 சந்தை மதிப்புள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

ஜூன் 6ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தினர். ஜூரோங், செங்காங், மரீன் பரேட், யீஷூன் உள்ளிட்ட இடங்களிலிருந்து போதைப் பொருள்கள் பிடிபட்டன.

கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப் பொருள்கள் ஆபத்தானவை என்றும் போதைப் புழக்கத்தை ஏற்படுத்துபவை என்றும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டது. அவை பலரது வாழ்க்கையை, குடும்பங் களை, சமூகங்களை அழிக்க வல்லது என்றும் அமைப்பு கூறியது.