சிறந்த பயணி விருதுக்கு ரிச்சர்ட் மேக்னஸ் பெயர்

சிறந்த பயணி விருதுக்கு ரிச்சர்ட் மேக்னஸ் பெயர்

3 mins read
7a90f5eb-83d4-433a-b7cf-c9e095368de8
-

நடப்­பில் உள்ள விருது ஒன்­றுக்கு காலஞ்­சென்ற பொதுப் போக்­கு­

வ­ரத்து மன்­றத் தலை­வர் ரிச்­சர்ட் மேக்­னஸ் பெயர் சூட்­டப்­பட்டுள்­ளது. 'தலை­சி­றந்த அக்­கறை செலுத்­தும் பயணி விருது' இவ்­வாறு பெயர் மாற்­றம் காண்­கிறது.

அன்­றாட பொதுப் போக்­கு­

வ­ரத்­துப் பய­ணத்­தின்­போது இதர பய­ணி­க­ளின் நலன்­மீது அக்­கறை செலுத்­தக்­கூ­டி­ய­வ­ருக்கு இந்த விருது வழங்­கப்­ப­டு­கிறது.

அது இனி­மேல் 'ரிச்­சர்ட் மேக்­னஸ் விருது' என்று அழைக்­கப்­படும்.

பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றத் தலை­வ­ரா­க­வும் எஸ்ஜி பய­ணி­கள் குழுத் தலை­வ­ரா­க­வும் பணி­யாற்­றிய திரு மேக்னசைக் கௌர­வப்­

ப­டுத்த அவ­ரது பெயர் விரு­துக்கு சூட்­டப்­ப­டு­வ­தாக போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

'அக்­க­றை­யுள்ள எஸ்ஜி பய­ணி­கள்' இயக்­கத்தை உரு­வாக்­கிய திரு மேக்­ன­சின் பங்­க­ளிப்பை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யி­லும் அவ­ரது பெய­ரில் விருது இடம்­பெ­று­கிறது.

இந்த இயக்­கத்­தின் நிகழ்வு ஒன்­றில் கலந்­து­கொண்டு பேசிய திரு ஈஸ்­வ­ரன், எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கு­வ­து­தான் பொதுப் போக்­கு

­வ­ரத்து முறை­யின் இன்­றி­ய­மை­யாத நோக்­கம் என்­றார். புக்­கிட் மேரா­வில் உள்ள எனே­ப­ளிங் வில்­லே­ஜில் நேற்று இந்த நிகழ்வு நடை­பெற்­றது.

நமது பொதுப் போக்­கு­வ­ரத்­தில் தடை­யற்ற, சொகு­சான பய­ணங்­களை எல்­லா­ரும் அனு­ப­விக்­க­லாம். இன்­னார்­தான் இதனை அனு­ப­விக்க வேண்­டு­மென்றோ வயது, திறமை போன்ற பின்­ன­ணியோ தேவை­யில்லை.

"பேருந்­து­களில் சக்­கர நாற்­காலி­ யு­டன் பய­ணி­களை ஏற்­றும் வசதி, பேருந்து மற்­றும் ரயில் நிலை­யங்­களில் உள்ள பய­ணி­கள் சேவை மையங்­களில் மேம்­ப­டுத்­தப்­பட்ட, குரல் கேட்­கும் வசதி போன்ற நட­வ­டிக்­கை­கள் கடந்த பல ஆண்­டு­

க­ளாக செயல்­ப­டுத்­தப்­பட்டுள்­ளன.

"எல்­லா­வற்­றை­யும் உள்­ள­டக்­கு­வது என்­பது வெறும் உள்­கட்­ட­மைப்­புக்கு மட்­டும் பொருந்­தாது, மக்­களும் அத­னுள் அடக்­கம்," என்­றார் அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன்.

கடந்த மார்ச் 14ஆம் தேதி மார­டைப்­பால் மாண்ட திரு மேக்­னஸ், 77, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிச் செயல்­ப­டு­வதை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தில் முனைப்­பு­டன் இருந்­த­தாக அவர் கூறி­னார்.

"நமது போக்­கு­வ­ரத்து முறை­யில் எல்­லா­ரும், எல்­லா­மும் இடம்­பெற வேண்­டும் என்­ப­தற்­கான தேடு­த­லில் திரு ரிச்­சர்ட் மேக்­னஸ் ஈடு­பட்­டுக்­கொண்டே இருப்­பார்.

"பல்­லாண்டு காலம் அவ­ரு­டன் வேலை செய்து, அவ­ரது செயல்­தி­றன்­க­ளைப் பற்றி அறி­யும் வாய்ப்பு எனக்­குக் கிட்­டி­யது.

"ஒரு­வர் மீது ஒரு­வர் அக்­கறை செலுத்த வேண்­டும் என்­ப­தற்­காக மக்­களை ஒருங்­கி­ணைப்­ப­தில் திரு மேக்­னஸ் எப்­போ­தும் கவ­னம் செலுத்­து­வார்.

"அவ­ரது பெய­ரில் அமை­யும் விருது அவ­ரது எண்­ணங்­க­ளுக்கு உரு­வம் கொடுக்­கப் பய­ணி­க­ளுக்கு தூண்­டு­த­லாக விளங்­கும் என்று நம்­பு­கி­றேன்," என்­றும் திரு ஈஸ்­வ­ரன் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

திரு மேக்­ன­சின் மக­னான திரு கீத் மேக்­னஸ், தமது தந்­தை­யைக் கௌர­வப்­ப­டுத்­தி­ய­தற்கு நன்றி தெரி­வித்­தார்.

மக்­கள் மீது அன்பு செலுத்­து­

வ­தை­யும் ஈவி­ரக்­கம் காட்­டு­வ­தை­யும் எப்போதும் நோக்­க­மா­கக் கொண்­ட­வர் தமது தந்தை என்­றார் அவர்.

திரு மேக்­னஸ், பொதுப் போக்கு­ வ­ரத்து மன்­றத்தின் தலை­வ­ராக 2014 முதல் இவ்­வாண்­டில் மர­ண­ம­டை­யும் வரை இருந்­தார்.

அத்­து­டன், 2020 முதல் இவ்­வாண்டு வரை, 'அக்­கறை செலுத்­தும் எஸ்ஜி பய­ணி­கள் குழு­'வின் தலை­வ­ரா­க­வும் அவர் இருந்­தார்.

2019ஆம் ஆண்டு திரு மேக்ன சின் தலை­மைத்­து­வத்­தின்­கீழ் 'தலைசிறந்த அக்­கறை செலுத்­தும் பயணி விரு­தை' பொதுப் போக்கு வரத்து மன்றம் தொடங்­கி­யது.

மறைந்த பொதுப் போக்குவரத்து மன்றத் தலைவரின் அரும்பணிகளுக்கு அங்கீகாரம்