புதிய அஞ்சல் தலைகளில் மனங்கவர்ந்த பொம்மைகள்

விழிப்புணர்வு தக­வல்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற ஐந்து விளம்­பர பொம்­மை­க­ளைத் தாங்­கிய இரண்­டாம் தொகுப்பு அஞ்­சல் தலை­களை சிங்­போஸ்ட் நேற்று வெளி­யிட்­டது.

2020 ஆகஸ்ட் மாதம் வெளி­யி­டப்­பட்ட முதல் தொகுப்­புக்­குக் கிடைத்த மித­மிஞ்­சிய வர­வேற்­பைத் தொடர்ந்து புதிய தொகுப்பு வெளி­யீடு கண்­டுள்­ள­தாக சிங்­போஸ்ட் கூறி­யது.

பொது­மக்­களில் பலர் தங்­க­ளது இளம்­ப­ரு­வத்­தில் அந்த பொம்­மை­க­ளைப் பார்த்­துப் பழக்­கப்­பட்­ட­வர்­கள் என்­ப­தால் அஞ்­சல் தலை­களை நினை­வு­க­ளாக வாங்­கிப் பத்­தி­ரப்­ப­டுத்த பல­ரும் முன்­வந்­த­தாக அது தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் 'மெர்லி', போஸ்­பேங் வங்கியின் 'ஸ்மைலி' (அணில்), பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் 'வாட்­டர் செல்லி', சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் 'பிளட் படி', 1980களி­லும் 1990களி­லும் சிங்­கப்­பூ­ரின் தேசிய உற்­பத்­தித்­தி­றன் இயக்­கத்­திற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட 'டீமி' ஆகிய விளம்­பர பொம்­மை­க­ளைத் தாங்கி புதிய அஞ்­சல் தலை­கள் வெளி­யி­டப்­பட்டு உள்­ளன.

30 காசு முதல் 80 காசு வரை­யி­லான அஞ்­சல் தலை­கள் நேற்று முதல் அஞ்­ச­ல­கங்­க­ளி­லும் இணை­யத்­தி­லும் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன.

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க மெர்­லை­யன் சின்­னத்­தின் அடிப்­ப­டை­யில் 'மெர்லி' பொம்­மையை 2018ஆம் ஆண்டு சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் உரு­வாக்கி தனது விளம்­ப­ரத்­துக்­குப் பயன்

­ப­டுத்­தி­யது.

அதே­போல, 1983ஆம் ஆண்டு முதல் குழந்­தை­க­ளுக்கு நாணய சேமிப்­பைச் சொல்­லித்­த­ர உதவும் தேசிய பள்ளி சேமிப்பு பிர­சா­ர பொம்மையான 'ஸ்மைலி' யை போஸ்­பேங் பயன்படுத்தி வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!