பெரியோர் கற்றலுக்கான சிறந்த முறையை வகுக்க ஆலோசனை

பெரியோர் கற்றலுக்கான சிறந்த முறையை வகுக்க ஆலோசனை

2 mins read
ebaf833e-b14b-4476-ab5c-0d3d2ebabb55
-

ஃபின்லாந்தை உதாரணமாகக் காட்டி கல்வியாளர்கள் விவாதம்

ஃபின்லாந்­தில் நீக்­குப்­போக்­கான வாழ்­நாள் கற்­றல் வாய்ப்­பு­களை ஒரே கூரை­யின்­கீழ் கொண்­டு­வர அங்­குள்ள 38 உயர் கல்வி நிறு­

வ­னங்­கள் கைகோத்­துள்­ளன.

கிட்­டத்­தட்ட அந்­நாட்­டின் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட, நிலப்­

ப­ரப்­பில் சிறிய சிங்­கப்­பூ­ரும் வாழ்­நாள் கற்­றல் ஆர்­வ­லர்­க­ளின் தேவையைப் பூர்த்தி செய்ய அதே­போன்­ற­தொரு ஏற்­பாட்­டைச் செய்­யும் நிலை­யில் உள்­ளது. கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் இதனை நேற்று ஒரு நிகழ்­வில் தெரி­வித்­தார்.

"பள்­ளிப் பரு­வத்­தின் முதல் 15 ஆண்­டு­க­ளுக்­குத் தேவை­யா­ன­வற்றை சிங்­கப்­பூர் அதி­க­மா­கவே முத­லீடு செய்து இருக்­கிறது. ஆயி­னும், கற்­ற­லின் அடுத்த 50 ஆண்­டு­கள் மீது கவ­னம் செத்­தும் வகை­யில் புதிய கண்­ணோட்­டத்­து­டன் கூடிய அம்­சங்­க­ளைக் கவ­னிக்க வேண்­டிய தேவை உள்­ளது," என்­றார் அவர்.

மேலும், "கற்­ப­தற்­கும் வேலைக்­கும் இடை­யி­லுள்ள செயற்­கைத் திரையை அகற்ற வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்டு உள்­ளது. குறிப்­பாக, புதிய 'வேலை-கற்­றல் சம­நிலை'யை நாம் உரு­வாக்க வேண்டி உள்­ளது.

"பெரி­யோர்­க­ளின் கற்­ற­லுக்கு உத­வும் வகை­யில் கல்வி நிலை­யங்­க­ளுக்கு இடை­யில் சிறந்த, மிக­வும் பொருத்­த­மான கற்­றல் முறையை எவ்­வாறு நிர்­வ­கிக்­க­லாம் என்­ப­தற்­கான ஆலோ­சனை நடை­பெற்று வரு­கின்­றன," என்று திரு சான் கூறி­னார்.

இங்­குள்ள ஆறு தன்­னாட்சி பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஒவ்­வொன்­றும் வெவ்­வேறு நிபு­ணத்­து­வத்­தை­யும் வலி­மை­யை­யும் கொண்­டி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வர் டான் எங் சை தெரி­வித்­துள்­ளார்.

'சிஇடி' எனப்­படும் தொடர் கல்வி மற்­றும் பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வோரை இலக்­கா­கக் கொண்ட கல்­வித் திட்­டங்­களை வகுத்து நிர்­வ­கிக்க இத்­த­கைய நிபு­ணத்­து­வ­மும் வலி­மை­யும் கைகொ­டுக்­கும் என்­றார் அவர்.

அதே­நே­ரம், "நமது எல்லா வகை­யான சிந்­த­னை­க­ளை­யும் ஒரு­சேர அறி­மு­கம் செய்­யும் தள­மாக சிஇடி இருக்­காது என்­பது எனது கருத்து," என்று சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­

க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வ­ரான லில்லி கோங் கூறி­னார்.

12வது அனைத்­து­ல­கக் கல்­வி­யா­ளர் ஆலோ­ச­னைக் குழு விவா­தத்­தின்­போது இவ்­வாறு வெவ்­வேறு வகை­யான கருத்­து­கள் தெரி­விக்­கப்­பட்­டன. ரிட்ஸ் கார்ல்­டன் மில்­லெ­னியா சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் கடந்த புதன்­கி­ழமை தொடங்­கிய குழு விவாத நிகழ்வு நேற்று நிறை

­வ­டைந்­தது.

கல்வி அமைச்­சால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இந்­தக் குழு ஈராண்டு முதல் மூன்­றாண்டு வரை­யி­லான இடை­வெ­ளி­யில் சந்­தித்து கல்வி முறையை ஆரா­யும். தற்­போ­தைய குழு­வில் ஜப்­பான், சீனா, இஸ்­ரேல், ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளைப் பிர­தி­நி­திக்­கும் பல­த­ரப்­பட்ட 15 கல்­வி­யா­ளர்­களும் தொழில்­து­றைத் தலை­வர்­களும் இடம்­பெற்­றுள்­ள­னர்.

ஃபின்லாந்து கற்­றல் ஏற்­பா­டு­

க­ளைப் பற்­றிய சில விவ­ரங்­களும் இந்த மூன்று நாள் விவா­தத்­தின்­போது வெளி­யி­டப்­பட்­டன.

'டிஜி­வி­சியோ 2030' என்­னும் தலைப்­பில் ஃபின்லாந்­தின் கல்­வித் திட்­டம் நடை­பெற்று வரு­கிறது. பெருந்­தி­ர­ளான தர­வு­கள், செயற்கை நுண்­ண­றிவு ஆகி­ய­வற்­றின் உத­வி ­யு­டன் மாண­வர்­க­ளுக்­கான தனிப்­பட்ட வழி­காட்­டு­தல்­க­ளை­யும் இது உள்­ள­டக்கி உள்­ளது.

மாண­வ­ரின் பின்­னணி, அவ­ரது முந்­திய கல்­வி­நிலை, வேலை அனு­ப­வம், வேலைச் சந்தை நில­வ­ரம் ஆகி­யன இந்­தக் கற்­ற­லின்­போது ஆரா­யப்­ப­டு­வ­தாக ஃபின்லாந்­தில் உள்ள ஆல்டோ பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வர் பேரா­சி­ரி­யர் இல்க்கா நீமெலா கூறி­னார்.