விடைபெறுகிறது பிரபல திரையரங்கு
ஹேண்டி ரோட்டில் அமைந்திருக்கும், சிங்கப்பூரின் ஆகப் பழமையான திரையரங்குகளில் ஒன்றான கேத்தே சினிப்ளெக்ஸ் இம்மாதம் 27ஆம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோபி காட் எம்ஆர்டி நிலையம் அருகே அமைந்துள்ள இத்திரையரங்கை செலவுகுறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூடுவதாக கேத்தே சினிப்ளெக்ஸ் திரையரங்குகளை நடத்தும் 'எம்எம்2 ஏஷியா' தெரிவித்துள்ளது. ஹேண்டி ரோட்டில் 1939ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இந்தத் திரையரங்கு, சிங்கப்பூரிலுள்ள பலரது நினைவுகளில் பதிந்த ஒன்று.
மரினா பே வட்டாரத்தில்
இன்று பல சாலைகள் மூடல்
மரினா பே மிதக்கும் மேடையில் தேசிய தின அணிவகுப்புக்கான ஒத்திகை நடைபெறுவதால் இன்றைய தினம் மரினா பே அருகில் உள்ள பல்வேறு சாலைகள் சில மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஃபிள்ஸ் அவென்யூ, தெமாசெக் அவென்யூ, பேஃபிரன்ட் அவென்யூ, ராஃபிள்ஸ் பொலிவார்ட் மற்றும் ரிபப்ளிக் பொலிவார்ட் ஆகிய சாலைகளில் இன்று போக்குவரத்து தாமதம் ஏற்படலாம் என்று சிங்கப்பூர் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளுக்குச் செல்வோர் பொதுப் போக்கு
வரத்தைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுவதாக அறிக்கை குறிப்பிட்டது. மேலும், வாகனமோட்டிகள் முன்கூட்டிய தங்களது பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளும்படியும் பாதிக்கப்படும் இந்தச் சாலைகளைத் தவிர்க்கும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஒத்திகை நடைபெறும் வட்டாரத்தில் சேவையாற்றக்
கூடிய பொதுப் பேருந்துகள் இன்று காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கமான பேருந்து நிறுத்தங்கள் பலவற்றில் நிற்காது. சில பேருந்துகளின் பயணப் பாதை தற்காலிகமாக மாற்றிவிடப்படும். அவை, 56, 70எம், 75, 77, 97, 106, 111, 133, 162எம், 195, 502, 857, 960 மற்றும் 960இ.
மூடப்படும் சாலைகளில் அவசரத் தேவையுள்ள வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
மாற்றுவழிகளில் செல்ல வாகனமோட்டிகளுக்கு உதவும் வகையில், பாதிக்கப்படும் சாலைகளின் சந்திப்புகளில் துணைக் காவல்படை அதிகாரிகளும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் அதிகாரிகளும் நிறுத்தப்படுவர். பாதிக்கப்படும் சாலைகளில் சட்டவிரோதமாக நிறுத்தப்படும் வாகனங்கள் இழுத்துச் சென்று அகற்றப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

