இந்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் விவியன் சந்திப்பு

இந்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் விவியன் சந்திப்பு

1 mins read
dcebf3cb-1176-4e52-a52f-3ece884e539e
-

இந்­தியா சென்­றி­ருக்­கும் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­

கி­ருஷ்­ணன் புதுடெல்­லி­யில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யின் அமைச்­சர்­நிலை அரங்­கில் பங்­கேற்று உரை­யாற்­றி­னார்.

இந்­தி­யா­வும் ஆசி­யா­னும் நீண்ட, வர­லாற்­று­பூர்வ உற­வு­க­ளைக் கொண்­டுள்­ளன.

பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்பை பெரிய அள­வில் வளர்த்­தல், அடுத்த ஐம்­பது ஆண்­டு­க­ளுக்­கும் அதற்கு மேலும் நீடித்து நிலைக்­கக்­கூ­டிய வளர்ச்­சிக்­கான மின்­னி­லக்­கப் புரட்­சி­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­தல் ஆகி­ய­வற்­றின் அவ­சி­யம் குறித்து டாக்­டர் விவி­யன் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

முன்­ன­தாக, இந்­திய அமைச்­சர்­கள் ஹர்­தீப் சிங் புரி­யை­யும் அஷ்­வினி வைஷ்­ணவை­யும் அவர் சந்­தித்­துப் பேசி­னார். சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான உற­வு­களை டாக்­டர் விவி­யனு­டன் அவ்­விரு அமைச்சர்­களும் மறு­

உ­றுதிப்­ப­டுத்­தி­னர். பார­திய ஜனதா கட்­சித் தலை­வர் ஜே.பி. நட்டா அளித்த தேநீர் விருந்­தில் டாக்­டர் விவி­ய­னு­டன் இந்­தி­யா­வின் இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரும் கலந்­து­கொண்­ட­தாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.