12.4%: ஐந்து மாதங்களுக்குப் பின்னர் வேகமான ஏற்றுமதி வளர்ச்சி

12.4%: ஐந்து மாதங்களுக்குப் பின்னர் வேகமான ஏற்றுமதி வளர்ச்சி

2 mins read
a52eae2f-2250-4f6a-8898-4f82b4b31783
-

சிங்­கப்­பூ­ரின் எண்­ணெய் சாராத ஏற்­று­மதி, ஆண்­டுக்­காண்டு அடிப்­

ப­டை­யில் சென்ற மாதம் 12.4 விழுக்­காடு என்­னும் வேக­மான வளர்ச்சி கண்­டது.

ஐந்து மாதங்­க­ளின் மெது­வான வளர்ச்­சிக்­குப் பின்­னர் இந்த வேகம் பதி­வா­ன­தாக என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு நேற்று தெரி­வித்­தது.

ஏப்­ரல் மாதத்­தில் ஏற்­று­மதி 6.4 விழுக்­காடு அதி­க­ரித்­தது. மே மாதத்­தில் 7.5 விழுக்­காடு வளர்ச்சி இருக்­கும் என்று புளூம்­பெர்க் நடத்­திய ஆய்­வில் பகுப்­பாய்­வா­ளர்­கள் முன்­னு­ரைத்து இருந்த இடை­நிலை வளர்ச்­சி­யை­யும் மிஞ்சி 12.4 விழுக்­காடு பதி­வா­ன­தாக அந்த அமைப்பு தெரி­வித்­தது.

மின்­னணு சாராத சரக்­கு­க­ளின் ஏற்­று­மதி இந்த வளர்ச்­சிக்­குப் பெரி­தும் கைகொ­டுத்­தது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யின் மின்­னணு சாராத சரக்­கு­

க­ளின் ஏற்­று­மதி 12.2 விழுக்­காடு கூடி­யது. அதற்கு முந்­திய மாதம் இதில் கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பகுதி, அதா­வது 4.6 விழுக்­காடு ஏற்­று­மதி வளர்ச்சி மட்­டுமே பதி­வா­னது.

மின்­னணு சாராத பொருள்­

க­ளின் ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு தனித்­து­வ­மான இயந்­தி­ரங்­கள் மற்­றும் அள­வி­டும் சாத­னங்­கள் பெரி­தும் உத­வின.

மின்­னணு துறை­யின் ஏற்­று­

ம­தி­யும் ஆண்­டுக்­காண்டு அடிப்­

ப­டை­யில் மே மாதம் 12.9 விழுக்­காடு அதி­க­ரித்­தது. ஏப்­ரல் மாதத்­தின் 12.8 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் சற்று அதி­க­மான அளவு இது. இந்­தத் துறை­யின் அதி­க­மான ஏற்­று­ம­திக்கு ஒருங்­கி­ணைந்த மின்­சுற்­று­கள், அதன் பாகங்­கள், கணினி வட்டு ஊட­கத் தயா­ரிப்­பு­கள் ஆகி­யன கைகொ­டுத்­தன.

இருப்­பி­னும், மருந்­தி­யல் துறை இரண்­டா­வது மாத­மாக வீழ்ச்சி கண்­டது. ஏப்­ரல் மாதம் 6 விழுக்­காடு இறங்­கிய அதன் ஏற்­று­மதி சென்ற மாதம் 8.6 விழுக்­காடு என்­னும் பெரிய வீழ்ச்­சி­யைச் சந்­தித்­தது.

பருவத்திற்கே சரிசெய்யப்பட்ட மாத அடிப்படையிலான, எண்ணெய் சாராத ஏற்றுமதி மே மாதம் 3.2 விழுக்காடு உயர்ந்து $17.1 பில்லியன் என்னும் அளவைத் தொட்டது. இது, ஏப்ரல் மாதம் 3.3 விழுக்காடு சரிவைச் சந்தித்து இருந்தது.