ஐந்­தாண்­டுக்­குள் மீண்­டும் சிறை செல்­வதை குறைக்க திட்­டம்

ஐந்­தாண்­டுக்­குள் மீண்­டும் சிறை செல்­வதை குறைக்க திட்­டம்

2 mins read
079f40fe-2837-49ae-be68-ca59477fc916
-

விடு­தலையாகி ஐந்து ஆண்­டு­களுக்­குள் மீண்­டும் குற்­றம் புரி­யும் முன்­னாள் கைதி­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

உள்­துறை துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் அதை முன்­வைத்­தி­ருக்­கி­றார்.

கடந்த 2016ல் விடு­விக்­கப்­பட்ட முன்­னாள் கைதி­களில் 41 விழுக்­காட்­டி­னர் ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் மீண்­டும் குற்­றம் புரிந்து சிறை சென்­ற­னர் என்று அவர் தெரி­வித்­தார்.

இந்த விகி­தத்­தைக் குறைக்க முன்­னாள் கைதி­க­ளுக்­கான குற்றத் தவிர்ப்பு ஆத­ர­வுக் கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­படும்.

குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டா­மல் வாழ்க்­கையை உரு­மாற்­றிய முன்­னாள் கைதி­கள் தங்­கள் வாழ்­வைப் புன­ர­மைத்து வரும் முன்­னாள் கைதி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வர்.

புனர்­வாழ்வு பெற்ற முன்­னாள் கைதி­க­ளின் உத­வி­யு­டன் சமூ­கத்­தி­ன­ரின் உத­வி­யும் பெறப்­படும். ஆத­ரவு வழங்­கு­வோ­ருக்­குத் தேவை­யான திறன்­ப­யிற்­சி­யும் அளிக்­கப்­படும்.

சிங்­கப்­பூர் சிறைத் துறை, மஞ்சள் நாடா சிங்­கப்­பூர் அமைப்பு ஆகி­ய­வற்­றின் பணித்­திட்­டங்­களை எடுத்­து­ரைத்த நிகழ்ச்­சி­யில் நேற்று கலந்­து­கொண்­ட­போது இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைஷல் பேசி­னார்.

சென்ற 2019ஆம் ஆண்­டில் விடு­தலை ஆன­வர்­களில் 20 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே, விடு­விக்­கப்­பட்ட ஈராண்­டு­க­ளுக்கு மீண்­டும் தடுத்­து­வைக்­கப்­பட்­ட­னர் அல்­லது சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­னர். அல்­லது அவர்­க­ளுக்கு ஒரு நாள் முன்­னிலை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இது சிங்­கப்­பூ­ரில் கடந்த 30 ஆண்­டு­களில் காணப்­பட்ட ஆகக் குறைந்த விகி­தம் ஆகும்.

அத்­து­டன், பிற நாடு­களை ஒப்­பி­டும்­போ­தும் இது குறை­வா­னது என்று இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைஷல் கூறி­னார்.

முன்­னாள் கைதி­கள் மறு­வாழ்வு பெற, கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்­கப்­பட்ட 'டேப்' எனப்­படும் திறன்­ப­யிற்சி, வேலைத் திட்­டம் கைகொ­டுத்து உதவி வரு­வதை இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைஷல் சுட்­டிக்­காட்­டி­னார்.

சமூ­கத்­தில் இருந்­த­வாறு முன்­னாள் கைதி­கள் கல்­வி­யும் பயிற்­சி­யும் பெறும் வேலை ஆயத்­தத் திட்­ட­மும் இவ்­வாண்டு தொடங்­கப்­படும் என்று அவர் கூறி­னார்.