ஈஸி-லிங்க் அட்­டை­களில் கட்­ட­ணம் தவ­றா­கக் கழிக்­கப்­பட்­ட­தில் 20,000 பேர் பாதிப்பு

ஈஸி-லிங்க் அட்­டை­களில் கட்­ட­ணம் தவ­றா­கக் கழிக்­கப்­பட்­ட­தில் 20,000 பேர் பாதிப்பு

1 mins read
981dcb78-41c1-4aa0-b403-92e7a1928dc6
-

கடந்த வாரம் தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக சுமார் 20,000 பய­ணி­க­ளின் ஈஸி-லிங்க் அட்­டை ­க­ளி­லி­ருந்து பணம் கழிக்­கப்­பட்­டது என்று ஈஸி-லிங்க் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

தான் பயன்­ப­டுத்­தும் கட்­ட­ணக் கட்­ட­மைப்­பில் ஜூன் 7ஆம் தேதி தொழில்­நுட்­பக் கோளாறு ஏற்­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளித்­த­போது அது கூறி­யது.

கடந்த 9ஆம் தேதிக்­குள் பாதிக்­கப்­பட்ட 99 விழுக்­காட்­டுப் பய­ணி­ க­ளின் அட்­டை­களில் கழிக்­கப்­பட்ட தொகையை நிரப்பிவிட்­ட­தாக நிறு­வ­னம் நேற்று கூறி­யது.

பாதிக்கப்பட்ட பயணிகளில் ஒரு விழுக்காட்டினர்தான் அந்த 20,000 பேர். அவர்­களில் சிலர் அந்­தத் தவறு பற்றி ஈஸி-லிங்க் நிறு­வ­னத்­தின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் புகார் அளித்­த­னர். அச்­சம்­ப­வம் பற்றி ஜூன் 9ஆம் தேதி ஃபேஸ்புக்­கில் மன்­னிப்புக் கேட்ட நிறு­வ­னம், 10ஆம் தேதிக்குள் பணத்­தைச் நிரப்பிவிடு­வ­தா­கக் கூறி இருந்­தது.