செய்­திக்­கொத்து

வழக்கு நடை­பெ­றும்­போது வெளி­நாடு செல்ல ஐரிஸ் கோ அனு­மதி கேட்­டார்

தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தற்கு எதி­ரான 'ஹீலிங் தி டிவைட்' குழு­வைத் தோற்­று­வித்த ஐரிஸ் கோவுக்கு எதி­ரான வழக்கு நடை­பெற்று வரும் நிலை­யில் அவர் மலேசியாவுக்குச் செல்ல நீதி­மன்­றத்­தி­டம் அனு­மதி கோரி­யுள்­ளார். தைராய்டு சுரப்பி புற்­று­நோய்க்கு சிகிச்சை பெற வேண்­டும் என்று கூறி அவர் அனு­மதி கோரி­யுள்­ளார்.

ஆனால் மாவட்ட நீதி­பதி இங் பெங் ஹொங், அந்த வழக்கை வரும் 22ஆம் தேதி வரை ஒத்தி வைத்­துள்­ளார். 46 வயது திரு­வாட்டி கோவின் உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்டிருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்று கூறிய நீதி­பதி, மேல்­வி­வ­ரங்­கள் வேண்­டும் என்று கேட்­டுள்­ளார்.

திரு­வாட்டி கோவின் தைராய்டு சுரப்­பி­களை அறுவை சிகிச்சை செய்து அகற்­ற­வேண்­டும் என்று சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை மருத்­து­வர்­கள் கூறி­னர் என்­றும் வெளி­நாட்டு மருத்­து­வர்­க­ளி­டம் கருத்­துக்­கேட்க அவர் விரும்­பு­வ­தா­க­வும் அவ­ரது வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

டாக்சி ஓட்­டு­நர்­களை பல­முறை

தாக்­கி­ய­வ­ருக்கு ஐந்து வாரம் சிறை

ஏற்­கெ­னவே பல­முறை டாக்சி ஓட்­டு­நர்­க­ளைத் தாக்­கிய ஆட­வர் ஒரு­வர், சிறை­யி­லி­ருந்து விடுக்­கப்­பட்ட பின்­னர் மூன்று வெவ்­வேறு சம்­ப­வங்­களில் டாக்சி ஓட்­டு­நர்­க­ளைத் தாக்­கி­னார். ஒவ்­வொரு சம்­ப­வத்­தி­லும் அவர் டாக்சி கட்­ட­ணங்­க­ளை­யும் செலுத்த மறுத்­தார்.

அந்­தச் சம்­ப­வங்­கள் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்­டு­வரை நடை­பெற்­றன.

குற்­றம் புரி­யும் நோக்­கத்­து­டன் வன்­மு­றை­யைப் பயன்­ப­டுத்­தி­யது உள்­ளிட்ட மூன்று குற்­றச்­சாட்­டு­களை 33 வயது டான் வீ மிங் ஒப்­புக்­கொண்­டார். தண்­டனை விதிக்­கப்­பட்­ட­போது, அவர் டாக்சி கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த மறுத்­த­தும் கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

டானுக்கு ஐந்து வாரம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அவர் பற்­றிய மேல்­வி­வ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

ஜூன் மாதம் முழு­வ­தும் மழை

கடந்த சில நாள்­க­ளா­கப் பெய்­து­வ­ரும் மழை இந்த மாத இறுதி வரை தொட­ரும் என்று சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு நிலையம் கூறி­யுள்­ளது. அன்­றாட வெப்­ப­நிலை 24 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் 33 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும் என்­றும் நிலை­யம் கூறி­யது.

சில நாள்­கள் மட்­டும் வெப்­ப­நிலை 34 டிகிரி செல்­சி­ய­சைத் தாண்­டும். சில இர­வு­க­ளி­லும் வெப்­ப­மாக இருக்­கும். குறிப்­பாக தீவின் கிழக்­கி­லும் தெற்­கி­லும் உள்ள கடற்­க­ரைப் பகு­தி­களில் அவ்­வாறு காணப்­படும்.

தென்­கி­ழக்­குக் காற்று கட­லி­லி­ருந்து நிலம் நோக்கி வந்து வெப்­ப­மும் ஈரப்­ப­த­மும் நிறைந்த காற்­றாக வீசும் என்­பதே அதற்­குக் கார­ணம். அது­போன்ற இர­வு­களில் வெப்­ப­நிலை 28 டிகிரி செல்­சி­யசை எட்­டக்­கூ­டும் என்று வானி­லை ஆய்வு நிலையம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!