பயனியர் வட்டாரத்தில் தீ

பயனியர் வட்டாரத்தில் தீ

1 mins read
3c675456-7c20-4941-b696-97180c8ef0ef
படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை -
multi-img1 of 3

பயனியர் வட்டாரத்தில் உள்ள ஒரு கிடங்கில் இன்று காலை தீ மூண்டது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த 50 தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இரண்டு மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது.

23 கல் டிரைவில் உள்ள ஒரு கழிவுப் பொருள் கிடங்கில் தீ பிடித்ததாக காலை 8.25 மணியளவில் படைக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள் கிடங்கில் தீ கொளுந்துவிட்டு எரிவதைக் கண்டனர்.

Watch on YouTube

கிடங்கிலிருந்து கறும்புகை வெளியேறிகொண்டிருந்ததாகவும் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.

தீ மற்ற பகுதிகளுக்குப் பரவுதை அதிகாரிகள் முதலில் தடுத்தனர். பிறகு, கிடங்குக்குள் சென்று தீயை அணைத்தனர்.

சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டன.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Watch on YouTube