இயந்திர மனிதன் சவால் போட்டியில் வென்ற மாணவர் குழு

இயந்திர மனிதன் சவால் போட்டியில் வென்ற மாணவர் குழு

1 mins read
d76e285f-0943-4979-bc0e-93ad2ddc1d7c
-

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழ­கத்­தின் பொறி­யி­யல் பள்ளி மாண­வர்­கள், 'ஒன்­அ­ரேனா இயந்­திர மனி­தன் சவால்­போட்­டி'க்கு ஏற்­பாடு செய்­தார்­கள்.

இயந்­திர மனி­தன் தொழில்­நுட்­பத்­தின் மூலம் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணிதம் (ஸ்டெம்) ஆகிய துறை­களில் மாண­வர்களுக்கு விருப்­பத்தை ஏற்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட போட்டி கடந்த வெள்­ளிக்­கி­ழமை முடிந்­தது.

அதில் தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் 121 பேர் 26 குழுக்­களா­கக் கலந்துகொண்­டார்­கள்.

ஆங்­கிலோ சீனப் பள்­ளி­யை (சுயேச்சை) சேர்ந்த தி பிளாங்க். பி என்ற குழு வென்­றது. அதற்கு $1,600 வழங்கப்பட்டது.

போக்­கு­வ­ரத்து அமைச்­சுக்­கான மூத்த நாடாளுமன்­றச் செய­லா­ளர் பே யாம் கெங் போட்டி நிறைவு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார். நடை­முறை உல­கில் இயந்­திர மனி­தத் தொழில்­நுட்­பம் ஆற்­றும் முக்­கிய பங்கை அவர் விளக்­கி­னார்.