மீண்டும் தொடங்கியது உட்லண்ட்ஸ்-ஜோகூர் ரயில் சேவை

மீண்டும் தொடங்கியது உட்லண்ட்ஸ்-ஜோகூர் ரயில் சேவை

1 mins read
a10c7a64-cb53-470b-8502-c195316e5b8d
உட்லண்ட்சுக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே மீண்டும் இயங்கும் 'கேடிஎம்' ரயில் சேவை. படம்: சாவ்பாவ் -
multi-img1 of 2

உட்லண்ட்சுக்கும் மலேசியாவின் ஜோகூர் பாரு நகருக்கும் இடையிலான ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமையன்று (19 ஜூன்) மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அதைத் தெரிவித்தார்.

'கேடிஎம்' எனும் இந்த ரயில் சேவையில் ஐந்தே நிமிடங்களில் உட்லண்ட்சிலிருந்து ஜோகூர் பாரவுக்குச் செல்லமுடியும்.

இவ்விரு பகுதிகளுக்கும் இடையே தினமும் 31 ரயில் சேவைகள் இயங்கும் என்று திரு வீ கூறினார்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மாரச் மாதம 24ஆம் தேதியிலிருந்து இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.