ஹெங் சுவீ கியட்டுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

ஹெங் சுவீ கியட்டுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

1 mins read
b2e3229e-25cd-47b3-b745-2e9a41efa6b8
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜெர்மனியில் இருக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

அதனால் முதன்முறையாக நடைபெறும் 'போய்ன்ட் ஸீரோ ஃபாரம்' எனும் நிதி தொழில்நுட்ப மாநாட்டில் அவர் பங்கேற்கமாட்டார்.

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் இருக்கும்போது தாம் கிருமித்தொற்றுக்கு ஆளானதாக திரு ஹெங் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

முகக்கவசம் அணிந்து கூட்டம் கூடும் பகுதிகளைத் தவிர்த்தபோதும் தாம் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தூங்கி எழுந்தபோது தமக்குத் தொண்டை வலி இருந்ததாகவும் இதுவரை நோய்க்கான அறிகுறிகள் மோசமாக இல்லை என்றும் திரு ஹெங் கூறினார்

தாம் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன் பூஸ்டர் எனும் கூடுதல் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டிருப்பது அதற்குக் காரணம் என்று அவர் சொன்னார்.