புது வகை மோசடிச் சம்பவங்கள், பறிபோன $71,000

ஜூன் மாதம் முற்பாதியில் மட்டும் தலைதூக்கிய புதிய வகை மோசடிச் சம்பவங்களில் சிக்கிய 67 பேர் மொத்தம் 71,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.

இம்மாதம் தொடக்கத்திலிருந்து பல புதிய வகை மோசடிச் செயல்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல் நடித்து மின்னஞ்சல்களை அனுப்பி மேற்கொள்ளப்பட்ட மோசடிச் செயல்கள் அவற்றில் அடங்கும்.

பொதுமக்களுக்குப் பல எச்சரிக்கை குறிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று எச்சரிக்கை குறிப்புகளை வெளியிட்டது.

பள்ளி விடுமுறை காலமான இம்மாதத்தில் சுற்றுப்பயண நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் மோசடிச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மோசடிச் செயல்கள் குறித்து தகவல் வைத்திருப்போர் scamalert.sg இணைய முகவரிக்குச் சென்றோ 1800-722-6688 எனும் தொலைபேசி எண்ணில் அழைத்தோ தெரியப்படுத்தலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!