மின்வாகனங்களுக்கான மின்னூட்டச் சேவையில் இடையூறு ஏற்படாதவண்ணம் புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த போக்கு
வரத்து அமைச்சும் நிலப் போக்குவரத்து ஆணையமும் உத்தேசித்து உள்ளன.
இந்நடவடிக்கை பயனீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த உத்தேசத் திட்டம், தற்போது பொதுமக்களின் கலந்தாலோசனைக்கு விடப்பட்டுள்ள மின்வாகன மின்னூட்டத்திற்கான வரைவு மசோதாவில் இடம்பெற்று உள்ளது.
மின்னூட்டக் கட்டமைப்பில் நீண்டகாலத்திற்கு இடையூறு தொடர்ந்தால் மின்னூட்டக் கட்டமைப்பை நடத்துவோரின் உடைமைகளையும் மின்னூட்டப் பணிகளையும் கைப்பற்றி வேறொருவருக்கு அவற்றைத் தரும் உரிமைகளைப் பெற நிலப் போக்குவரத்து ஆணையம் விரும்புகிறது.
தொலைத்தொடர்புத் துறை, வங்கித்துறை போன்று மின்வாகன மின்னூட்டச் சேவையும் அத்தியாவசியச் சேவையாக காலப்போக்கில் ஆக்குவதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வருங்காலத்தில் மாசு இல்லாத எரிசக்தி வாகனப் போக்குவரத்தில் மின்வாகனங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்றும் அப்போது அந்த வாகனங்களின் போக்குவரத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த பாதுகாப்பு நடைமுறைகள் அவசி யமாக விளங்கும் என்றும் எரிசக்தி ஆய்வுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் துணைப் பேராசிரியர் லீ போ செங் கூறினார்.
மின்னூட்டக் கட்டமைப்பில் ஏற்படும் இடையூறு, நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதோடு மின் நிலையங்களுக்கு இடர்ப்பாடு களையும் ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக அவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரி வித்தார்.

