குற்றவாளிகளைப் பிடிக்க பெரிதும் உதவும் மரபணுச் சோதனை

குற்றவாளிகளைப் பிடிக்க பெரிதும் உதவும் மரபணுச் சோதனை

2 mins read
8c439c8a-fad0-428b-8cb6-62a2075697c8
-

குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிக்க அண்­மைக் கால­மாக மர­ப­ணுச் சோதனை முறை காவல்­து­றைக்­குப் பெரி­தும் உத­வி­வ­ரு­கிறது.

குறிப்­பாக, கொலைக் குற்­ற­

வா­ளி­க­ளைப் பிடிப்பதில் கடந்த எட்டு, ஒன்­பது ஆண்­டு­க­ளாக மர­

ப­ணுச் சோதனை முடி­வு­க­ளின் பய­னாக 100 விழுக்­காடு வெற்றி கிடைத்து உள்­ள­தாக காவல்­

து­றை­யின் சிறப்­புப் புல­னாய்­வுப் பிரி­வுத் தலை­வர், கண்காணிப் பாளர் ராய் லிம் தெரி­வித்­துள்­ளார்.

குற்­றம் நிகழ்ந்­த­தைப் பார்த்த சாட்­சி­கள் இல்­லா­த­போ­தும் சம்­ப­வப் பகு­தி­யில் கண்­கா­ணிப்­புப் படச் சாத­னங்­கள் (சிசி­டிவி) இல்­லாத நிலை­யி­லும் குற்­ற­வா­ளி­களை அடை­யா­ளம் காண்­ப­தில் மர­ப­ணுச் சோதனைத் தரவுகள் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக அவர் கூறி­னார்.

குற்­றச் செயல்­க­ளைக் கண்­ட­றிய 1991ஆம் ஆண்டு முதல் மர­

ப­ணுச் சோதனை முறையை காவல்­துறை பயன்­ப­டுத்தி வரு­கிறது.

இதற்­கான தர­வுப் பதிவு முறை 2004ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. குற்­ற­வா­ளி­க­ளி­டம் இருந்து எடுக்­கப்­பட்ட ரத்­தம், எச்­சில் மாதி­ரி­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­

க­ளைப் பற்­றிய விவ­ரங்­க­ளைப் பதிவு­ செய்து வைக்க இது உதவு­ கிறது.

இவ்­வாறு பதி­வு­செய்­யப்­பட்ட குற்­ற­வா­ளி­களில் பலர் தண்­டிக்­கப்­பட்­டுள்­ள­னர். போதைப்­பொ­ருள் தடுப்­புச் சட்­டத்­தின்­கீ­ழான குற்­றங்­க­ளைப் புரிந்­தோ­ரும் இவர்களில் அடங்­குவர்.

தண்­டனை பெற்ற குற்­ற­வாளி விடு­தலை ஆகி­விட்­டாலோ இறந்து ­விட்­டாலோ அவர் தொடர்­பான மர­பணு விவ­ரங்­கள் தர­வுப் பதி­களில் இருந்து அழிக்­கப்­ப­ட­வேண்­டும் என குற்­ற­வா­ளி­கள் பதி­வுச் சட்­டம் வரை­ய­றுக்­கிறது.

ஏப்­ரல் மாதம், பாலி­யல் தாக்­கு­தல் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்­கு ஒன்றில் உரை­யாற்­றிய சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் பல்­வேறு குற்­றங்­

க­ளுக்­குத் தீர்­வு­காண மர­ப­ணுச் சோதனை விவ­ரப் பதி­வு­கள் உதவி உள்­ள­தா­கத் தெரிவித்தார்

அதற்கு அவர் ஓர் உதா­ர­ணத்­தை­யும் குறிப்பிட்டார். 2002ஆம் ஆண்­டு­மு­தல் தீர்வு காணப்­ப­டா­மல் கிடப்­பில் இருந்த பாலி­யல் வன்புணர்வு வழக்கு ஒன்­றில் பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு குற்­ற­வா­ளி­யைக் கைது­செய்ய மர­ப­ணுச் சோதனை மாதிரி கைகொ­டுத்­த­தாக திரு சண்­மு­கம் கூறினார்.