தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 தொற்று உறுதி; தனிமையில் ஹெங் சுவீ கியட்

1 mins read
f083dbea-9525-4497-8fe9-3f92ce447615
-

ஜெர்­மனி சென்­றி­ருக்­கும் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். இதனை அவரே நேற்­றுக் காலை தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார். சனிக்­கி­ழமை பெர்­லின் நக­ரில் இருந்­த­போது தமக்­குத் தொற்று உறுதிசெய்­யப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

ஜூன் 12ஆம் தேதி லண்­டன் சென்ற திரு ஹெங் (படம்), 'லண்­டன் டெக் வீக்' என்­னும் தொழில்­நுட்ப மாநாட்­டில் கலந்­து­கொண்­டார். ஜூன் 16ஆம் தேதி பெர்­லின் சென்று சேர்ந்­தார். தமது பய­ணம் முழு­வ­தும் முகக்­க­வ­சம் அணி­வ­தை­யும் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­ப­தை­யும் தொடர்ந்­த­போ­தி­லும் தொற்று ஏற்­பட்­டு­விட்­ட­தாக அவர் தமது பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

"காலை­யில் எழுந்­தி­ருக்­கும்­போது தொண்டை வறட்சி இருந்­தது. என்­னி­டம் காணப்­படும் அறி­கு­றி­கள் கடு­மை­யா­ன­வை­யாக இல்லை. நல்­ல­வே­ளை­யாக நான் மூன்று தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுள்­ளேன்," என்­றார் திரு ஹெங்.

தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் ஹோட்டல் ஒன்றில் அவர் தனி­மை­யில் உள்­ளார்.

பய­ணத்­தின் இறு­திக்­கட்­ட­மாக சுவிட்­சர்­லாந்து சென்று அங்கு நடை­பெ­றும் 'பாயிண்ட் ஸீரோ' கருத்­த­ரங்­கில் திரு ஹெங் பங்­கேற்­ப­தாக இருந்­தது. இதில் பங்­கேற்க இய­லா­ம­மைக்­காக அவர் வருத்­தம் தெரி­வித்­துள்­ளார்.

அனைத்­து­லக நிதிக்­கான சுவிஸ் செய­ல­க­மும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் லாப நோக்­கமற்ற அமைப்­பான 'எலிவென்டி'யும் இணைந்து நடத்­தும் 'பாயிண்ட் ஸீரோ' கருத்­த­ரங்கு சூரிக் நகரில் நாளை (ஜூன் 21) முதல் வியா­ழக்கிழமை வரை நடை­பெ­று­கிறது.