அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் 0.35 மாத அரையாண்டு போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதல் தொகையாக $200 முதல் $400 வழங்கப்படும்.
பொதுத் துறை தொழிற்சங்கங்களுடன் நடத்திய அணுக்கமாக ஆலோசனைக்குப் பின்னர் போனஸ் தொகை முடிவுசெய்யப்பட்டது என்றும் அப்பிரிவு கூறியது.
"அனைத்து அரசாங்க ஊழியர்களின் கடின உழைப்பையும் பங்களிப்பையும் அரசாங்கம் மிகவும் மெச்சுகிறது," என்று அப்பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
MX13(I), MX14 ஆகியவற்றுக்கு நிகரான தரநிலைகளில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒருமுறை வழங்குதொகையாக $200 கிடைக்கும். MX15, MX16 ஆகியவற்றுக்கு நிகரான தரநிலைகளில் இருப்போரும் செயற்பாட்டு ஆதரவுத் திட்ட (ஓஎஸ்எஸ்) தரநிலை 3 முதல் 5ல் இருப்போரும் கூடுதலாக ஒருமுறை வழங்குதொகையாக $400 பெறுவர்.
சென்ற ஆண்டில் அரையாண்டு போனசாக 0.3 மாதச் சம்பளம் வழங்கப்பட்டது. அப்போது, இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒருமுறை வழங்குதொகையாக $350 முதல் $700 வரை கிடைத்தது.

