தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகளிடமிருந்து பாதுகாப்பு

தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகளிடமிருந்து பாதுகாப்பு

2 mins read
460ee17f-7c5a-4937-bac6-a0bfe5a15ea8
இணையம் மூலம் தீங்கு ஏற்படாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அதன்படி, சமூக வலைத்தளங்கள் மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் புதிய இணைய விதி­மு­றை­க­ளின்­கீழ் ஃபேஸ்புக், டிக்­டோக், டுவிட்­டர் போன்ற சமூக வலைத்­த­ளங்­கள் கூடிய விரை­வில் மாற்­றங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய கருத்­து­க­ளி­ட­மி­ருந்து இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­து­வோ­ரைப் பாது­காக்க சமூக தர­நிலை மற்­றும் கருத்­துச் செயல்­மு­றை­களை அவை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

அது­மட்­டு­மின்றி, 18 வய­துக்­கும் குறை­வா­னோ­ரைப் பாது­காக்க கூடு­தல் பாது­காப்பு அம்­சங்­க­ளைச் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

தகாத கருத்­து­கள், தேவை­யில்­லாத தொடர்­பு­கள் ஆகி­ய­வற்­றைக் குறைத்­துக்­கொள்ள இளை­யர்

­க­ளுக்­கும் அவர்­க­ளது பெற்­றோ­ருக்­கும் உத­வும் அம்­சங்­கள் இருப்­பதை சமூக வலைத்­த­ளங்­கள் உறுதி செய்ய வேண்­டும்.

அபா­ய­க­ர­மான செயல்­களில் ஈடு­பட இணை­ய­வா­சி­க­ளைத் தூண்­டும் 'காணொ­ளிச் சவால்­கள்', இணை­யம் மூலம் நேர­டி­யாக ஒளி­

ப­ரப்­படும் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் போன்­ற­வற்­றால் பாதிப்­பு­கள் ஏற்­

ப­டக்­கூ­டும் என்று தொடர்பு, தக­வல் அமைச்சு நேற்று கூறி­யது.

இணையம் மூலம் ஏற்படக்கூடிய தீங்கு காரணமாக சிங்கப்பூருக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அமைச்சு எச்சரிக்கை விடுத்தது.

பிற சமயங்கள், இனங்கள் ஆகியவற்றைத் தூற்றும் கருத்துகளை இணையம் மூலம் பரப்பி சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமய, இன மக்களிடையே பிளவு ஏற்படக்கூடும்.

சன்லைட் அலயன்ஸ் ஃபார் ஆக்‌ஷன் இணையம் மூலம் நடத்திய ஆய்வை அமைச்சு சுட்டியது. ஆய்­வில் பங்­கெடுத்த சிங்­கப்­பூ­ரர்­களில் கிட்­டத்­தட்ட 50 விழுக்­காட்­டி­னர் இணை­யம் மூலம் விளை­விக்­கப்­படும் தீங்­கால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பிர­பல சமூக ஊட­கச் சேவை­கள் மூலம், இணை­யம் மூலம் ஏற்­படும் அபா­யங்­களை 61 விழுக்­காட்­டி­னர் எதிர்­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள புதிய விதி­மு­றை­கள் பற்­றிய சில விவ­ரங்­களை தொடர்பு, தக­வல்

அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பகிர்ந்துகொண்­டார்.

"இணைய பாது­காப்பை மேம்­

ப­டுத்த உல­க­ளா­விய நிலை­யில் குரல்­கள் வலுக்­கின்­றன. இணை­யம் மூலம் தீங்கு ஏற்­ப­டா­மல் இருக்க பல நாடு­கள் புதிய சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளன. சில நாடு­கள் இத்­த­கைய சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன," என்று அமைச்­சர் டியோ தெரி­வித்­தார். இணை­யப் பாது­காப்பை வலுப்

­ப­டுத்த புதிய சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ள நாடு­க­ளு­டனும் புதிய பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்ள நாடு­க­ளு­ட­னும் சிங்­கப்­பூர் இணைந்து செயல்­ப­டு­கிறது.

ஆலோசனை, ஒத்துழைப்பு அணுகுமுறை மூலம் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் விரும்புவதாக அவர் கூறினார்.

மற்ற நாடு­க­ளின் அனு­ப­வங்­

க­ளி­லி­ருந்து கற்­றுக்­கொண்டு அதன்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றார் அவர்.

அத்­து­டன், புதிய தொழில்­நுட்­பங்­கள் மற்­றும் புத்­தாக்­கங்­கள் தொடர்­பாக தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளு­டன் சிங்­கப்­பூர் இணைந்து செயல்­படும் என்று அமைச்சர் டியோ கூறி­னார்.

"தொழில்­நுட்ப ரீதி­யாக சாத்­தி­யப்­படும் நட­வ­டிக்­கை­களை எடுக்க இந்த அணு­கு­முறை கைகொ­டுக்­கும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

இம்­மாத தொடக்­கத்­தி­லி­ருந்து தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளி­டம் ஆலோ­சனை நடத்தி வரு­வ­தாக தொடர்பு, தக­வல் அமைச்சு தெரி­வித்­தது.

பொது­மக்­க­ளி­டம் நடத்­தப்­படும் ஆலோ­சனை அடுத்த மாதம் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு இணை­யம் மூலம் தீங்கு ஏற்­ப­டா­தி­ருக்க, சமூக ஊட­கச் சேவை­க­ளுக்கு வழி­காட்ட தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­துக்கு அதி­கா­ரம் வழங்­கப்­படும்.